இஸ்ரோ அனுப்பும் விண்வெளி வீரர்களுக்கான 30 வகையான இந்திய உணவு இடம் பெற்றுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்திய விமானப்படையில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் அவர்களுக்கான பயிற்சி விரைவில் ரஷியாவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், 30 வகை இந்திய உணவுகள் வகைகள் உள்ளன.
இந்த உணவு வகைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் உருவாக்கி இருக்கிறது. இஸ்ரோ மற்றும் விண்வெளி வீரர்கள் எந்த வகையான உணவுகளை விரும்புகிறார்கள் என்பதை இறுதி செய்வோம். அதன்பின் அதில் மாற்றங்கள் கூட செய்வோம் என உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
உணவு பட்டியலில் சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, சுஜி அல்வா, சிக்கன் கறி, பாதாம், கீரை, பன்னீர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதில் இன்னும் சில உணவு வகைகள் தேவைப்படுகிறது. அதை விரைவில் ஆராய்வோம் என தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.