புது தில்லி: விடுமுறை (Holidays) நாட்களின் பட்டியல் என்பது ஓய்வு நேர நடவடிக்கைகளைத் திட்டமிடுவது மட்டுமல்லாமல் மற்ற பணிகளுக்கும் முக்கியமானது. புத்தாண்டு முடிந்து விட்டது. அதனுடன் புதிய விடுமுறை பட்டியலும் வந்துள்ளது. விருந்து, உணவு மற்றும் கொண்டாட்டங்களில் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்பு, ஜனவரி மாதத்தில் நீங்கள் பெறும் விடுமுறை நாட்களின் பட்டியலை பாருங்கள். முழு விவரத்தையும் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
2020 ஜனவரி விடுமுறை நாட்கள்:
ஜனவரி 1, 2020 (புதன்கிழமை): புத்தாண்டு தினம் (இந்தியா முழுவதும்)
ஜனவரி 2, 2020 (வியாழக்கிழமை): குரு கோபிந்த் சிங் ஜெயந்தி (சில மாநிலங்களில்)
ஜனவரி 2, 2020 (வியாழக்கிழமை): மன்னம் (Mannam) ஜெயந்தி (கேரளா)
ஜனவரி 11, 2020 (சனிக்கிழமை): மிஷனரி தினம் (மிசோரம்)
ஜனவரி 14, 2020 (செவ்வாய்க்கிழமை): தை திருநாள் (தமிழ்நாடு)
ஜனவரி 15, 2020 (புதன்கிழமை): லோஹ்ரி (Lohri)/ பொங்கல் / மகர சங்கராந்தி / போகலி பிஹு (Bhogali Bihu) / ஹடகா (இந்தியா முழுவதும்)
ஜனவரி 16, 2020 (வியாழக்கிழமை): திருவள்ளுவர் தினம் (புதுச்சேரி / தமிழ்நாடு)
ஜனவரி 17, 2020 (வெள்ளிக்கிழமை): உழவர் திருநாள் (புதுச்சேரி / தமிழ்நாடு)
ஜனவரி 23, 2020 (வியாழக்கிழமை): நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஜெயந்தி (மேற்கு வங்கம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம்)
ஜனவரி 26, 2020 (ஞாயிறு): குடியரசு தினம் (இந்தியா முழுவதும்)
ஜனவரி 30, 2020 (வியாழக்கிழமை): வசந்த் பஞ்சமி (இந்தியா முழுவதும்)
ஜனவரி 31, 2020 (வெள்ளிக்கிழமை): மீ-தம்-மீ-பி (Me-Dam-Me-Phi) (அசாம்)
(குறிப்பு: விடுமுறையின் இந்த பட்டியல் மாநிலத்தைப் பொறுத்தது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேறுபடலாம் மற்றும் சில விழாக்கள் அந்தந்த பிராந்தியத்தில் கொண்டாடப்படுகின்றன.)
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.