டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா வெகு விரைவாக முன்னேறி வரும் வேளையில், ஆதார் பான் கார்டு உட்பட் பல பணிகளை, வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலமாக நிறைவேற்ற முடிகிறது. அந்த வகையில், பாஸ்போர்ட் ஆவணத்தை எவ்வாறு எளிதாக பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வது எப்படி?
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்டைப் பெற, நீங்கள் முதலில் பாஸ்போர்ட் சேவாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.passportindia.gov.in/ என்ற தளத்திற்கு சென்று ந்யூ யூஸர் கிளிக் செய்வதன் மூலம் இங்கே நீங்கள் பதிவு செய்யலாம்.
அதில் பதிவு செய்ய அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகம், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், பிறந்த தேதி, லாக் இன் ஐடி போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும். அதில் Register என்ற ஆப்ஷனை கிளிக் செய்க.
இதற்குப் பிறகு நீங்கள் பாஸ்போர்ட் சேவா (Passport Seva) வலைத்தளத்திற்குச் சென்று முகப்பு பக்கத்தில் தோன்றும் பச்சை நிறத்தில் உள்ள லாக் இன் என்பதை கிளிக் செய்க. உங்கள் மின்னஞ்சல் ஐடியை இங்கே உள்ளிட்டு ‘Continue’ என்பதைக் கிளிக் செய்க. இதற்குப் பிறகு மின்னஞ்சல், பாஸ்வேர்ட் மற்றும் படத்தில் காட்டப்படும் எழுத்துக்களை டைப் செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். இதைச் செய்த பிறகு லாக் இன் என்பதை கிளிக் செய்க.
ALSO READ | CoWIN: தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விபரங்களை சேர்ப்பது எப்படி..!!
இதற்குப் பிறகு தோன்றும் புதிய விண்டோவில், புதிய பாஸ்போர்ட் / பாஸ்போர்ட் மீண்டும் அனுப்புதல் விண்ணப்பிக்கும் (Apply for Fresh Passport/Reissue of Passport) ஆப்ஷனை இங்கே காண்பீர்கள். இதைக் கிளிக் செய்க. இங்கே உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். முதலில்- நீங்கள் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதை நிரப்பி, பின்னர் அதை மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றலாம், இரண்டாவதாக நீங்கள் படிவத்தை ஆன்லைனிலேயே நிரப்பலாம்.
அடுத்த பக்கத்தில் நீங்கள் புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் ரீஇஷ்யூ, சாதாரண அல்லது தத்கல் முறையில் பெறப்படும் பாஸ்போர்ட், 38 பக்கங்கள் அல்லது 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். உங்களது தேவைக்கேற்ப ஆப்ஷன்களை தேர்வுசெய்யவும்.
நீங்கள் தனிப்பட்ட தகவல்களை அடுத்த பக்கத்தில் வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் தகவல்கள் உங்களிடம் உள்ள ஆவணங்களுடன் பொருந்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, வலது மூலையில் உள்ள விண்ணப்பத்தை சமர்ப்பி என்பதற்கான பட்டனை கிளிக் செய்க.
படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, படி எண் 9 இல் குறிப்பிடப்பட்டுள்ள வலைப்பக்கத்திற்கு மீண்டும் செல்லுங்கள். View Saved / Submitted Applications என்பதைக் கிளிக் செய்க. சிறிது நேரத்திற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை இங்கே நீங்கள் காண முடியும். அதற்கு அடுத்துள்ள ரேடியோ பொத்தானைக் கிளிக் செய்க. இதற்குப் பிறகு Pay மற்றும் Schedule Appointment ஐக் கிளிக் செய்க.
ஆன்லைன் கொடுப்பனவைத் தேர்ந்தெடுத்து அடுத்து என்பதைக் கிளிக் செய்க. இப்போது உங்கள் நகரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா மையங்களின் (PSK) பட்டியல் திரையில் தோன்றும். அதில் உங்களுக்கான அப்பாயிண்ட்மெண்டின் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும்.
ALSO READ | Aadhaar Card: ஒரு ஆதார் அட்டை மூலம் எத்தனை புதிய SIM வாங்கலாம் என்பது தெரியுமா..!
இப்போது Pay and Book Appointment என்பதைக் கிளிக் செய்க. இதனை அடுத்து பேமெண்ட் கேட்வே தோன்றும். கட்டணத்தை செலுத்திய உடன் , நீங்கள் மீண்டும் பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்தை அடைவீர்கள். அதில் அப்பாயிண்ட்மெண்ட் உறுதியானது குறித்த தகவல் தோன்றும். இந்த பக்கத்தில், பாஸ்போர்ட் சேவை மையத்தில் (PSK ) உங்களுக்கு கிடைத்துள்ள அப்பாயிண்மெண்ட் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கும். விண்ணப்ப ரசீதை பிரிண்ட் எடுப்பதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்து, விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து கொள்ளவும்.
இப்போது பிரிண்ட் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை அடைவீர்கள். அங்கே உங்களுக்கு 2 மணி நேரம் ஆகலாம். போலீஸ் வெரிபிகேஷன் முடிந்த பின்னர் உங்கள் பாஸ்போர்ட் கிடைக்கும். உங்களுக்கு எப்போது பாஸ்போர்ட் கைக்கு வரும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ |DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR