kula deiva vazhipaadu Benefits : குழந்தை பாக்கியம் வேண்டி மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் தம்பதிகள் பலர், கோவில் கோவிலாக சுற்றி நாளொரு பொழுதுமாக விரதமும் இருக்கிறார்கள். மருத்துவர்களே கூட முடிந்தளவுக்கு நவீன சிகிச்சை கொடுத்துவிட்டு, உங்களுக்கு இந்த பாக்கியம் கிடைப்பது கடவுள் கையில் தான் இருக்கிறது சொல்வதும் நடக்கிறது. அதனால், அத்தகைய குழந்தை வரம் வேண்டி அலையும் தம்பதிகள் என்ன தான் பிரச்சனை, எங்கு தான் பிரச்சனை என யோசித்தே வேண்டாத மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அத்தகைய தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க இந்த ஒரு முயற்சியும் எடுத்து பாருங்கள். அது ஒன்றும் அவ்வளவு கடினமானதும் இல்லை.
அந்த முயற்சி என்ன என்கிறீர்களா? குலதெய்வ வழிபாடு தான். திருமணமாகி கணவர் வீட்டில் அடியெடுத்து வைத்த பெண்கள் எல்லோரும் கணவரின் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யும் அதேவேளையில் பிறந்து வளர்ந்தபோது கும்பிட்ட பெற்றோரின் குல தெய்வ வழிபாட்டை அப்படியே மறந்துவிடுகின்றனர். மனைவி குலதெய்வம் எது என சிலருக்கு தெரியாமல்கூட போய்விடுகிறது. திருமணமான புதிதில் ஒருமுறை அந்த கோவிலுக்கு சென்று வந்ததோடு சரி என மீண்டும் மனைவி குலதெய்வ கோவில் பக்கம் கணவர்கள் செல்வதே இல்லை. பல கோவில்களுக்கு குழந்தை வரம் வேண்டி அலையும் தம்பதிகள், கணவர் குலதெய்வ வழிபாட்டோடு மனைவி குலதெய்வ கோவிலுக்கும் சென்று வாருங்கள். உங்களின் முயற்சி கை கூடும்.
மேலும் படிக்க | பெண்கள் இந்த வயதில் இதய பரிசோதனை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்!
ஐயூஐ, ஐவிஎப் முயற்சி கூட எல்லோருக்கும் பலன் கிடைத்துவிடுவதில்லை. காசு, நேரம் என எல்லாவற்றையும் கொடுத்து ஒரு குழந்தை பாக்கியத்துக்காக அலையும் தம்பதிகளுக்கு அந்த முயற்சியின் கடைசியில் தான், இந்த முயற்சி உறுதியாக கிடைக்கும் என சொல்ல முடியாது, கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் மருத்துவர் சொல்கிறார். அதுவரை இந்த சிகிச்சையில் குழந்தை கிடைத்துவிடும் நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு பேரிடியாக அந்த செய்தி அவர்கள் மனதில் விழும். உடனே எல்லா இஷ்ட தெய்வங்களையும் வணங்குவார்கள். அப்படி வணங்கி கிடைத்துவிட்டால் மகிழ்ச்சியே. இல்லையென்றால் மீண்டும் ஒருமுயற்சி செய்வதும் தப்பில்லை.
அந்த முயற்சியின்போதே மனைவி குலதெய்வத்துக்கும் அடிக்கடி செய்து பிரார்த்தனை செய்து வாருங்கள். இரண்டு பேரின் குலதெய்வத்தையும் மனமுருகி வேண்டி தொடர்ந்து வழிபடுங்கள். உங்களுக்கான குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். மருத்துவர்களின் ஆலோசனைபடி சிகிச்சையையும் தொடர்ந்து ஒருபுறம் மேற்கொண்டிருக்க, இந்த வழிபாடும் உங்களுக்கு அந்த முயற்சிக்கு உறுதியான பலனை கொடுக்கும்.
எப்போது குலதெய்வ வழிபாடு செய்யலாம்?
குலதெய்வ வழிபாடு செய்ய நேரம், காலம் எல்லாம் இல்லை. உங்களுக்கு மனதுக்கு தோன்றும் நேரத்தில் அக்கோவிலுக்கு சென்றுவிடுங்கள். மனமுருகி வேண்டுங்கள். சீக்கிரம் எங்களுக்கான பாக்கியத்தை கொடு தெய்வமே என வேண்டும்போது, உங்களுக்கான அந்த பாக்கியத்தை நிச்சியம் சீக்கிரம் கொடுப்பார். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி சீக்கிரம் பிறக்கும்.
மேலும் படிக்க | பெண்கள் சனிக்கிழமை தாலி கயிறு மாத்தலாமா? இந்த தப்பை செஞ்சிடாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ