LPG Gas Cylinder இணைப்பு பெறுவது எளிதாகி விட்டது: இந்த வசதி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

எல்.பி.ஜி இணைப்பு பெறுவது மிகவும் சுலபமாகிவிட்டது. இதில் பல புதிய வசதிகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன. 

Last Updated : Jul 27, 2021, 01:45 PM IST
LPG Gas Cylinder இணைப்பு பெறுவது எளிதாகி விட்டது: இந்த வசதி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  title=

New LPG Gas Connection: புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவது ஆன்லைன் ஷாப்பிங் போலவே எளிதாகி விட்டது. முன்னதாக எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெறுவதற்கு உங்களிடம் முகவரி ஆதாரம் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் எல்பிஜி இணைப்பைப் பெற முடியும், இல்லையெனில் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பு கிடைக்காது.

சில சமயங்களில் மற்ற காரணங்களாலும் எரிவாயு இணைப்பைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் இப்போது புதிய விதிகள் காரணமாக இந்த கடினங்கள் எளிதாகி விட்டன.

முகவரி ஆதாரம் இல்லாமல் கேஸ் சிலிண்டர் இணைப்பு கிடைக்கும்

ஆனால் இப்போது நீங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், அது இனிமேல் இருக்காது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு இருந்தால், நீங்களும் எளிதாக எரிவாயு இணைப்பை பெற முடியும்.

இதற்காக நீங்கள் எந்த வகையான முகவரி ஆதாரத்தையும் (Address Proof) வழங்கத் தேவையில்லை. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்கியுள்ளன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் இதைப் பெறலாம்.

பழைய குடும்ப இணைப்பில் புதிய எல்பிஜி இணைப்பு கிடைக்கும்

இந்த வசதியின் கீழ், பெற்றோர், உடன்பிறப்புகள் அல்லது குடும்பத்தில் உள்ள வேறு எதாவது உறவினரின் பெயரில் ஏற்கனவே ஒரு கேஸ் சிலிண்டர் இணைப்பு எடுக்கப்படிருந்தால், மற்ற குடும்ப உறுப்பினர்களும் இந்த முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ: LPG சிலிண்டரை எங்கிருந்து வாங்கலாம்? இனி அது உங்கள் சாய்ஸ்

இந்த முகவரியை வெரிஃபை செய்தால் போதும். 

வாடிக்கையாளரின் குடும்பத்தில் எந்த எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் எரிவாயு ஏஜென்சியின் கேஸ் சிலிண்டர் இணைப்பு 
 உள்ளதோ, அந்த கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) இணைப்பு நிறுவனத்துக்குச் சென்று எரிவாயு இணைப்பு தொடர்பான ஆவணங்களை கொடுக்க வேண்டும். சரிபார்ப்பிற்குப் பிறகு, புதிய எரிவாயு இணைப்பு கிடைக்கும்.

புதிய இணைப்பில் எல்பிஜி மானியமும் கிடைக்கும்

இதில் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், இதில் அடிப்படை எரிவாயு இணைப்பில் கிடைக்கும் மானியம், அதே அடிப்படையில் எடுக்கப்பட்ட பிற இணைப்புகளிலும் கிடைக்கும். இத்தகைய எரிவாயு இணைப்புகளை உஜ்வலா திட்டத்தின் (Ujwala Scheme) கீழ் பதிவு செய்யலாம். உங்கள் ஆதார் அட்டை மற்றும் பழைய எரிவாயு இணைப்பு தொடர்பான ஆவணங்களின் நகலை எரிவாயு நிறுவனத்திற்கு கொடுத்து புதிய எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரே முகவரியில் பல எரிவாயு இணைப்புகளை எடுக்க முடியும்.

அனைத்து எரிவாயு இணைப்புகளும் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், எந்தவிதமான மோசடிக்கும் வாய்ப்பில்லை. ஒரே முகவரியில் பல எரிவாயு இணைப்புகளின் வசதியை அரசாங்கம் தொடர்ந்து விரிவுபடுத்துகிறது.

ALSO READ: Good News! Indane: சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய ஆதார், முகவரி சான்று தேவையில்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News