வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.100 அதிகரித்து டெல்லியில் ரூ.2355.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.
மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை
அத்துடன் தற்போது, ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், எல்பிஜி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வு மூலம், இன்று முதல் டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.2355.50 ஆக உள்ளது. அதே சமயம், கொல்கத்தாவில் ரூ.2351க்கு பதிலாக ரூ.2455, மும்பையில் ரூ.2205க்கு பதிலாக ரூ.2307க்கு விற்கப்படுகிறது. அதேசமயம் சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2406ல் இருந்து ரூ.2508 ஆக உயர்ந்துள்ளது.
மே 1 முதல் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை
மும்பை- ரூ.949.50
டெல்லி- ரூ.949.50
கொல்கத்தா - ரூ 976
சென்னை - ரூ.965.50
இதற்கிடையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பட்டு, மார்ச் 22ம் தேதி ரூ.9 குறைந்தது. அதே நேரத்தில், அக்டோபர் 2021 முதல் பிப்ரவரி 1, 2022 வரை, வணிக சிலிண்டரின் விலை ரூ.170 அதிகரித்தது. அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1736 ஆக இருந்தது. இது நவம்பர் 2021 இல் 2000 ஆகவும், டிசம்பர் 2021 இல் ரூ 2101 ஆகவும் ஆனது. இதன் பிறகு, ஜனவரியில் மீண்டும் மலிவாகி, பிப்ரவரி 2022ல் விலை குறைந்து ரூ.1907க்கு விற்கப்பட்டது. இதற்குப் பிறகு, ஏப்ரல் 1, 2022 அன்று சிலிண்டர் விலை ரூ.2253ஐ எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | SBI Recruitment 2022: பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR