காதலர்களுக்கு இது ஏற்ற நேரம்: இந்த ராசிகளுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும்

Astrology: சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நாளை மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 12:21 PM IST
  • ஒருவருடைய ராசியின் அடிப்படையில் எதிர்காலம் மற்றும் சுபாவத்தை எளிதில் கணக்கிட முடியும்.
  • சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நாளை மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
  • அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காதலர்களுக்கு இது ஏற்ற நேரம்: இந்த ராசிகளுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும் title=

ராசி பலன்: ஒரு ராசியில் சந்திரனின் நிலையும், தாக்கமும் அந்த நபரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கின்றன. மேலும், ஒரு நபரின் எதிர்காலத்தையும், அவர் வாழ்வில் அன்பின் பிணைப்பையும் பற்றி இதன் மூலம் அறியலாம். 

ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவருடைய ராசியின் அடிப்படையில் எதிர்காலம் மற்றும் சுபாவத்தை எளிதில் கணக்கிட முடியும். நீங்களும் யாரையாவது காதலித்து, உங்கள் பெற்றோருடன் திருமணத்தைப் பற்றி பேச விரும்பினால், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நாளை மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் முன்னேற்றத்தை காணலாம். 
 
ரிஷபம்: 
ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்கள் யாரையாவது காதலித்து அவருடன் வாழ்க்கையை வாழ நினைத்தால் மே 7ம் தேதி இந்த காரியத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய காதல் வாழ்க்கையும் துவங்கலாம். காதல் துணையுடன் மாலை நேரத்தை செலவிடலாம். அதே சமயம் திருமணமானவரின் வாழ்வில் இனிமையும் இருக்கும். துணையுடன் உறவு வலுப்பெறும்.

மேலும் படிக்க | கடக ராசிக்காரர்கள் இதை பின்பற்றினால் நல்லது நடக்கும்! 

மிதுனம்:

உங்கள் காதலை திருமணம் என்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல விரும்பினால், சனிக்கிழமை அதை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கு சாதகமான நேரமாக இருக்கும். உங்கள் காதன் / காதலியை பெற்றோருக்கு அறிமுகப்படுத்தலாம். 

நாளை உங்களுக்கு ஏற்ற சாதகமான முடிவுகள் வர வாய்ப்புள்ளது. வாழ்வில் மகிழ்ச்சியை தட்டி எழுப்ப தயாராக இருங்கள். நல்ல நேரத்துக்காக நீங்கள் காத்திருப்பதால், நாளை மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

சிம்மம்:
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டே இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர். வீட்டில் திருமணம் பற்றிய பேச்சு நடந்துகொண்டிருந்தால், உங்கள் காதலை பற்றி சொல்ல வெண்டிய நேரம் இது.

நாளைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். தாமதிக்காமல், காதலன் / காதலியை விரைவில் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தை உருவாக்குங்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். 

மகரம்: 
சிங்கிளாக இருந்து திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பவர்களுக்கு நாளை சிறப்பான நாளாக இருக்கும். இந்த நாளில் உங்கள் திருமணம் பற்றி பேசலாம். திருமண யோசனை வரலாம். நீங்கள் விரும்பும் துணையைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே தயாராகுங்கள், உங்கள் வாழ்வில் விரைவில் திருமணம் என்னும் சுப நிகழ்வு நடக்கவுள்ளது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நடக்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News