கர்நாடகாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கேமராக்களின் மீது கொண்ட காதலால் கேமரா வடிவிலான வீடு ஒன்றை கட்டியுள்ளார்...!
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஒரு கனவு இல்லம் கட்ட வேண்டும் என்ற ஆடை நிச்சயமாக இருக்கு. ஆனால், பலருக்கும் அந்த ஆசையை நிறைவேற்ற கொடுத்து வைப்பதில்லை. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கேமராக்களின் மீது கொண்ட காதலால் கேமரா வடிவிலான தனது கனவு இல்லத்தை கட்டியுள்ளார். இந்த புகைபடங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பெல்காம் மாவட்டத்தில் வசிக்கும் 49 வயதான ரவி ஹோங்கல் புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். அவருக்கு சிறுவயது முதலே கேமராவின் மீதும், புகைப்பட கலையின் மீதும் அளவுகடந்த ஆர்வம். இந்நிலையில், அவரும் அவரது மனைவியும் இணைந்து கேமரா வடிவிலேயே ஒரு கனவு இல்லத்தை கட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதில், ஆச்சர்யம் என்ன என்றால் அவர்களுடைய மகன்களுக்கும் கேனான், எப்சன் மற்றும் நிக்கான் என கேமரா நிறுவனங்களின் பெயர்களையே வைத்துள்ளனர்.
Also Read | Watch: நேரலையின் போது விழுந்த தொகுப்பாளரின் பல் செட்... அதிர்ந்து போன கேமரா மான்..!
A camera shaped house in bengaluru build by Ravi hongal who is a photographer from Belgaum Karnataka.
And even named his 3 sons
Nikon , Canon , EpsonThis is called love for the passion pic.twitter.com/kBidBxpFrH
— ויקאס פנדיטה (@TORUKH_MAKTO) July 13, 2020
சுமார் மூன்று அடுக்குகளை கொண்ட இந்த வீடு, DSLR கேமராவுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த வீட்டின் முகப்பில் லென்ஸ், ஃபிளாஷ், படச்சுருள் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. கேமராவை போலவே வீட்டின் முன்பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னல் View finder போல் அமைந்துள்ளது. இது தனது கனவு இல்லம் என கூறும் ரவி ஹோங்கல், தன்னிடம் இருந்த பணம் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இந்த வீட்டை கட்டி முடித்ததாக தெரிவித்துள்ளார். இந்த புதுமையான வீட்டிற்கு ‘க்ளிக்’ எனவும் பெயர் வைத்துள்ளார்.
க்ளிக் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. புகைப்படக் கலைஞரின் கலையார்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.