இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த ‘சமூக தொலைதூர சல்சா’ நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த ஒரு பகுதியாக, மக்கள் அனைவரும் முகமூடி அணிய வேண்டும், சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சூப்பிட்டு கழுவ வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை கடைபிடிக்குமாறு தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான, ‘சமூக தொலைதூர சல்சா’ நடனம் இணையத்தில் வைரளாக பரவி வருகிறது. இந்த வீடியோவை
பத்திரிகையாளர் பியான்கா பத்ரே ஒகாசியோ (Bianca Padró Ocasio) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு ஆண் மற்றும் பெண்ணின் அற்புதமான சல்சா நடன திறமையை காட்டுகிறது. இந்த வீடியோவில், இருவரும் ஆர்வத்துடன் நடனமாடுவதைக் காணலாம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்களுக்குள் சரியான தூரத்தை பராமரித்து முகமூடிகளை அணிந்துகொள்கிறார்கள். அவர்களின் இயக்கங்களை ஒத்திசைத்து ஒருங்கிணைக்க, இருவரும் கைகளில் இரண்டு கயிறுகளை வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த வீடியோ காட்டுகிறது.
READ | எச்சரிக்கை...! சீனாவிலிருந்து மற்றொரு புதிய கொடிய வைரஸ் பரவும் அபாயம்...
இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில், "காலை வணக்கம். எனது நண்பர் ஒருவர் சமூக தொலைதூர சல்சாவின் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், நான் இப்படி இருக்க முயற்சிக்கிறேன்” என்று ஒகாசியோ அந்த வீடியோவை எழுதி பகிர்ந்துள்ளார்.
Good morning ☀️ A friend of mine shared this video of social distanced salsa and it’s how i’m tryna be.
Enjoy. pic.twitter.com/xTtr3lO5my
— Bianca Padró Ocasio (@BiancaJoanie) June 29, 2020
வீடியோவைப் பார்ப்பது வேடிக்கையானது மட்டுமல்ல, இருவரின் படைப்பாற்றலும் உங்களை வியப்பில் ஆழ்த்தும். ஒரு நாள் முன்பு இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ இப்போது வரை சுமார் 1.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. கூடுதலாக, இது 87,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 23,000 ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.