தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 மாதாந்திர உதவித்தொகை திட்டம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கி உதவி தொகையும் கொடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு துறையும் உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Nov 22, 2024, 06:19 PM IST
    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தனி துறை.
    பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    மாதம் மாதம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 மாதாந்திர உதவித்தொகை திட்டம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! title=

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தற்போது சில நல்ல செய்திகளை மக்களுக்கு பகிர்ந்துள்ளார்.  மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் அவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் கிடைக்கும். இந்த திட்டத்தில் பயன்பெற யாரிடம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பிரதீப் குமார் விளக்கமளித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் இந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கி உதவி தொகையும் கொடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு துறையும் உள்ளது.

மேலும் படிக்க | 2025ல் பொது விடுமுறை நாட்கள் இதுதான்! தமிழக அரசு அறிவிப்பு!

இந்த துறையின் சார்பில் அரசு பள்ளிகள் அல்லது அரசு அங்கீகரிக்கும் பள்ளிகளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 1000, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு ரூ. 3000, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 4000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 6000 மற்றும் உயர் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ. 7000 உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த பணம் ஒவ்வொரு மாதமும் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு வழிகளில் அரசு உதவுகிறது. சொந்தத் தொழில் தொடங்க வங்கிக் கடன் மானியமும் வழங்கப்படுகிறது. பார்வையற்றவர்களை இலவசமாக பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கும் ஒரு சிறப்புத் திட்டமும் உள்ளது.

கூடுதலாக, மாற்றுத்திறனாளிகள் பள்ளி, வேலை அல்லது மருத்துவ சிகிச்சைக்காக பயணிக்க வேண்டியிருக்கும் போது அவர்களுக்கு தள்ளுபடி உண்டு. அவர்கள் பேருந்து கட்டணத்தில் 25% மட்டுமே செலுத்தினால் பொதும். 40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு, 75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு,  40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500 வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் உதவி தொகை குறித்த சில முக்கிய செய்திகளை பகிர்ந்துள்ளார். சிந்தனையில் கடுமையான சவால்கள் உள்ள அறிவுசார் குறைபாடுடைய நபர்களுக்கும், கைகள் மற்றும் கால்களை நகர்த்துவதில் சிரமம் உள்ளவர்கள், தொழுநோய் பதித்தவர்கள், தீவிர மூளை அல்லது நரம்பு மண்டலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் பார்கின்சன் நோய், முதுகுத்தண்டில் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் உதவி பெற விரும்பினால் அருகில் உள்ள தமிழ்நாடு இ-சேவை மையத்திற்கு சென்று PWD தேசிய அடையாள அட்டை, புகைப்படம், PWD ஆதார், குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் போன்ற முக்கிய ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | Ayushman Card: 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு... இப்படி விண்ணப்பிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News