திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. இந்த தடை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி உலக முழுவதும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், தற்போது திருப்பதியில் நவம்பர் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. திருப்பதி நகராட்சி முழுவதும் அக்டோபர் 2ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், திருப்பதி கோவில் பகுதியில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது.