பிரதோஷத்தின் போது, சிவன் கோயிலுக்குச் சென்று, நந்தியம் பெருமானையும் ஈசனையும் தரிசித்து வேண்டுவது, எல்லா நலனையும் வளத்தையும் வழங்கும்.
சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அற்புதமான ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.
இன்று பிரதோஷம். பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்யுங்கள். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும். எனவே இந்த நாளில், மறக்காமல் பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்!