7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ

7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

7th Pay Commission: இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பரிசீலித்து வருவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரச்னையில் அரசு தீவிரமாகச் சிந்தித்து, ஊழியர்களின் நலன் கருதி எந்த முடிவையும் எடுக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது. எனினும், அரசாங்கம் இதற்கான உறுதிப்பாட்டை இன்னும் அளிக்கவில்லை. 

 

1 /11

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் அலவன்சுகளில் மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றங்களை செய்கிறது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 3% அதிகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த டிஏ மற்றும் டிஆர் 53% ஆக உயர்ந்துள்ளது.

2 /11

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி புதிய அகவிலைப்படி ஜூலை 1 2024 முதல் அமலில் இருக்கும். முன்னதாக ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 இல் வந்தது. அதன் பிறகு 46% ஆக இருந்த அகவிலைப்படி 50% ஆக உயர்ந்தது.

3 /11

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் (Dearness Relief) 50% -ஐத் தாண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா என்பது குறித்த விவாதங்கள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன.

4 /11

அரசாங்கத்தின் தரப்பில் இருந்து இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 5வது ஊதியக் குழுவின் போது அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதை அகவிலைப்படியுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் அமைப்பை எளிதாக்க 5வது ஊதியக்குழுவில் இது பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

5 /11

அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

6 /11

ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டால், அது பெரிய அளவிலான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் நிரந்தர மாற்றம் கொண்டு வருவதோடு, அகவிலைப்படியின் அடிப்படையில் ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுவார்கள்.

7 /11

இது மட்டுமின்றி, இந்த மாற்றம் ஊழியர்களின் கொடுப்பனவுகள், போனஸ், ஓய்வூதியம் மற்றும் பிற அலவன்சுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவை அனைத்தும் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டவை.  

8 /11

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பரிசீலித்து வருவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரச்னையில் அரசு தீவிரமாகச் சிந்தித்து, ஊழியர்களின் நலன் கருதி எந்த முடிவையும் எடுக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது. எனினும், அரசாங்கம் இதற்கான உறுதிப்பாட்டை இன்னும் அளிக்கவில்லை.

9 /11

தினம் தினம் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியில் மாற்றம் செய்யப்படுகின்றது.  

10 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (2001 அடிப்படை ஆண்டு = 100) – 115.76)/115.76] x 100 / மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: டிஏA% = [(AICPI இன் சராசரி (கடந்த 3 மாதங்களில் அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.