உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுகள் பழமையானதா.. இன்றே புதுபிக்கவும்... இல்லையெனில்...!

ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016 என்னும் விதியின் கீழ், ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது 'அடையாளச் சான்று' மற்றும் 'முகவரிச் சான்று' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2023, 02:40 PM IST
  • ஆதார் அட்டைதாரர்கள் வழக்கமான ஆன்லைன் புதுப்பிப்பு சேவையைப் பயன்படுத்தலாம்.
  • ஆதார் அட்டை புதுப்பிப்பு கட்டணமான ரூ. 50 கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய UIDAI முடிவு.
  • myAadhaar போர்ட்டல் மூலம் மாற்றங்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே புதிய வசதி கிடைக்கும்.
உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுகள் பழமையானதா.. இன்றே புதுபிக்கவும்... இல்லையெனில்...! title=

ஆதார் அட்டை: இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணம். ஆதார் அட்டை மூலம் பல விஷயங்களை எளிதாக செய்ய முடியும். அதே நேரத்தில் அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்த ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தொடர்பாக அரசு தரப்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மக்கள் பயன்பெற உள்ளனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை புதுப்பிப்பு
ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016 என்னும் விதியின் கீழ், ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது 'அடையாளச் சான்று' ( POI) மற்றும் 'முகவரிச் சான்று' (POA) ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஆதாரில் உள்ள விபரங்களை புதுப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் அட்டை மூலமாக நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. 

இலவச சேவை

இந்நிலையில், இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் நோக்கில் 'மக்களை மையமாகக் கொண்ட நடவடிக்கையில்', இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் போர்ட்டலில் தங்களுடைய ஆவண விவரங்களைப் புதுப்பிக்க ஆதார் அட்டை புதுப்பிப்பு கட்டணமான ரூ. 50 கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இலவச சேவை கிடைக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | மார்ச் 31ம் தேதிக்குள் கட்டாயம் இந்த வேலைகளை முடிச்சுருங்க!

myAadhaar போர்ட்டல்

myAadhaar போர்ட்டல் மூலம் மாற்றங்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே புதிய வசதி கிடைக்கும் என்றாலும், புதுப்பிப்புகளுக்காக ஆதார் மையங்களுக்குச் செல்பவர்கள் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். மக்கள் தங்கள் விவரங்களை (பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவை) மாற்ற வேண்டிய அவசியம் இருந்தால், ஆதார் அட்டைதாரர்கள் வழக்கமான ஆன்லைன் புதுப்பிப்பு சேவையைப் பயன்படுத்தலாம் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்த்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாதாரண கட்டணங்கள் பொருந்தும்.

ஆதார் அட்டை

இருப்பினும், தொலைபேசி எண்ணை மாற்ற விரும்பும் நபர்கள் ஆதார் மையத்திற்கு நேரடியாகச் சென்று கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களின் UID ஐப் புதுப்பிக்காத ஆதார் அட்டை தாரர்களுக்கு, தங்கள் தனிப்பட்ட விவரங்களை மீண்டும் சரிபார்க்க ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற UIDAI அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | உங்கள் ஆதார் எண்ணை தவறான பயன்பாடுகளில் இருந்து தடுக்க சில வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News