தன் பேட்டரி திறமைகளால் தனி புகழ் பெற்ற Motorola புதுவரவான Mot G6 மற்றும் Moto G6 Play மொபைல்கள் இந்தியாவில் வெளியானது!
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், பிரேஸிலில் நடைப்பெறும் நிகழ்ச்சி ஒன்றில் Motorola தனது Moto G6, Moto G6 Plus, Moto G6 Play என்னும் 3 போன்களை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது Moto G6 மற்றும் Moto G6 Play ஆகிய இரண்டு போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் விவரக்குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
3GB RAM மற்றும் 32GB சேமிப்பு திறன் கொண்ட Moto G6-ன் விலை Rs 13,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேலையில் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு திறன் கொண்ட Moto G6-ன் விலை Rs 15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேலையில் 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு திறன் கொண்ட Moto G6 Play-ன் விலை Rs 11,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Moto G6 Play ஆனது 5.7"HD திரையுடன் வெளிவருகிறது, அதேப்போல்
Moto G6 Plus ஆனது 5.93" HD திரையுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Moto G6 ஆனது (12MP+5MP) என இரண்டு லென்ஸ் பின் கேமிரா திரனுடனும், 16MP முன்கேமிராவுடனும் வெளியாகிறது. மேலும் Snapdragon 450 processor, 4GB RAM மற்றும் 3,000mAh பேட்டரி திறனுடனும் வெளியாகிறது.
Moto G6 Plus ஆனது, Qualcomm Snapdragon 630 processor மற்றும் 3,200mAh பேட்டரி திறனுடனும் வெளியாகிறது.
Moto G6 Play ஆனது Snapdragon 427 processor, 13MP பின் கேமிரா, 8MP முன்கேமிரா மற்றும் 4,000mAh பேட்டரி திறனுடனும் வெளியாகிறது.