புது டெல்லி: தனியார் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் ஷாருக்கான் தனது மதம் குறித்து கருத்துக்கள் தெரிவித்த வீடியோ மிகவும் வைரலாகி அந்த வீடியோவில், அவர், இங்கு இந்து முஸ்லீம் என்றே பேசுக்கே இடமில்லை. என் மனைவி மேரி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், என் குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபோது, நாங்கள் மதப் பிரிவை நிரப்ப வேண்டியிருந்தது. எங்கள் மதம் என்ன என்று என் மகள் கேட்டாள். நாம் இந்தியர்கள். மதம் என்று ஒன்று இல்லை. மதம் என்பது இருக்கவும் கூடாது. எனவே மதப் பிரிவு பகுதியில் இந்தியர்கள் என்று நிரப்பினேன் என்றார்.
ஏற்கனவே நேர்காணலில் ஒருமுறை நடிகர் ஷாருக்கான், எந்தவொரு மதமும் ஒரு நபரை வீட்டிற்குள் அழுத்தப்படுவதில்லை, அவர்கள் ஒவ்வொரு மதத்தின் பண்டிகைகளையும் சமமான ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள் என்று ஐ.ஏ.என்.எஸ் மீடியாவிடம் கூறியிருந்தார். மேலும் என் மகன் மற்றும் மகளுக்கு ஆரியன் மற்றும் சுஹானா போன்ற பொதுவான பெயர்ளை தான் வைத்தேன் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
My wife is Hindu, I am a Muslim and my kids are Hindustan. My daughter was asked the religion in school form, I told her we are Indians - The pride of India Shah Rukh Khan. #RepublicDayIndia #RepublicDay2020 pic.twitter.com/Qk95xxLT3j
— Neel Joshi (@neeljoshiii) January 25, 2020
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.