பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக 52 வயதான நடிகர் பிரகாஷ்ராஜ் மீது உ.பி., மாநில லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு.
பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. தொடர்ந்து பிரதமர் மோடி மவுனமாகவே இருக்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தயாரிக்கும் அறிக்கையை நீங்கள் பார்த்தால், அவர் ஒரு முதலமைச்சரா அல்லது ஒரு பூசாரி என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அவர் என்னை விட மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். எனது 5 தேசிய விருதுகளை அவருக்கு கொடுக்க நினைக்கிறேன் எனவும் கூறியிருந்தார்.
இவரது கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து, பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.