தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது

Deepika Padukone Ranveer Singh Blessed With A Baby Girl: பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியனருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2024, 02:52 PM IST
  • கர்ப்பமாக இருந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
  • தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை கூறி வருகின்றனர்..
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது title=

Deepika Padukone Ranveer Singh Blessed With A Baby Girl: பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியனருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்:
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone And Ranveer Singh) ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன் கடந்த 2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடிகையாக அறிமுகமான ஆனார். அதேசயம் இந்தி திரையுலகில் 2007 ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மறுபுறம் நடிகர் ரன்வீர் சிங் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

மேலும் படிக்க | Bigg Boss 8 Tamil: பிக்பாஸ் 8: போட்டியாளராக களமிறங்கும் சீரியல் நடிகை.. கன்டென்ட் கட்டாயம் பிச்சிக்கும் 

முன்னதாக நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த தீபிகா படுகோன், சில பிரச்சனைகளால் இவர்களது உறவு சில ஆண்டுகள் கழித்து முறிந்தது. இதனைத் தொடர்ந்து ராம் லீலா படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதன் பின்னர் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் இணைத்து பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், 83 ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் கர்ப்பம்:
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் தீபிகா மற்றும் ரன்வீர் (Deepika Padukone, Ranveer Singh announce pregnancy) தங்களின் இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து இருந்தனர். மேலும், அவர்கள் தங்கள் குழந்தையை வரும் செப்டம்பர் 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதியனருக்கு பெண் குழந்தை:
இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இதனால் அவர்களது குடும்பம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும் தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை கூறி வருகின்றனர்..

 

முன்னதாக தீபிகா படுகோன் சமீபத்தில் ஃபோட்டோஷூட்டை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். மேலும் இந்த புகைப்படம் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | The GOAT Movie Cast And Crew Salary: விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News