Chiyan 60: இதுதான் சியான் 60 படத்தின் டைட்டில்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ' மகான் ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 05:32 PM IST
  • விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ' மகான் ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
  • விக்ரம் நடிப்பில் சமீபகாலமாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் அவர் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்
Chiyan 60: இதுதான் சியான் 60 படத்தின் டைட்டில்!  title=

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ' மகான் ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

மாஸ்டர் படத்தின் துணை தயாரிப்பாளர் லலித் குமாரின் தயாரிப்பில் ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட சியான் 60 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று 5 நாட்கள் முன்னர் படப்பிடிப்பு முழுவதுமாக இறந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இதனிடையே இன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் மாலை 6.30 மணிக்கு வெளியாகப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

chiyan

இதனிடையில்,  இப்படத்தின் தலைப்பு தற்போது கசிந்துள்ளது. ' மகான் '  என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம் கேங்க்ஸ்டர் ஆகவும் அவரது மகன் துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கோப்ரா படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், சியான் 60 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  தற்போது விக்ரம் கோபுர படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.  அதேசமயம் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் நடிப்பில் சமீபகாலமாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் அவர் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.  தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள சியான் 60 படம் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸுக்கு தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News