விஜய்க்கு அபராதம் - தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கான இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 16, 2022, 05:54 PM IST
  • விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்தது
  • அதற்கு எதிராக விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்
  • வருமான வரித்துறையின் அபராதத்துக்கு நீதிமன்றம் தடை
விஜய்க்கு அபராதம் - தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு title=

நடிகர் விஜய் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். இவர் கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.   அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை அவர் கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. 

இதனையடுத்து வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. 

மேலும் படிக்க | ராஜ்கமல் நிறுவனம் விரைவில் 100வது படத்தை தயாரிக்க வேண்டும்: கமல்ஹாசனின் ஆசை

அப்போது, விஜய் தாக்கல் செய்த மனுவில், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், விஜய்யின் மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | “நீங்கள் இன்னொரு தாய்”... நயன் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் உருக்கமான வாழ்த்து

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு படம் பாக்குறதுக்கு முன்னால எல்லாரும் தூக்கத்த போடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News