ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இரண்டாவது படமான இடிமுழக்கம் படத்தை ஜிவி பிரகாஷ் (GV Prakash) வைத்து இயக்குனர் சீனு ராமசாமி எடுத்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பித்தது. முழுக்க சென்டிமெண்ட் கதைகளாகவே எடுத்து வந்த சீனுராமசாமி இந்த படத்தில் ஆக்சனை கையில் எடுத்துள்ளார். அவரது சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு புதிய பரிமாணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடிமுழக்கம் படத்தின் தலைப்பை அவரது முந்தைய படங்களின் ஹீரோக்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் அறிவித்தனர்.
ALSO READ திரையரங்கு தாண்டி தொலைக்காட்சியிலும் சாதனை படைத்த கர்ணன்!
இந்நிலையில் இடிமுழக்கம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்தபின் ஜிவி பிரகாஷுக்கு இந்த படத்தில் கண்டிப்பாக விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும் என்று இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதற்கு ஜி பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ்சை பற்றி சீனுராமசாமி கூறியதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
#இடிமுழக்கம்
முதற்கட்ட படப்பிடிப்பு
முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு
தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு.
@Kalaimagan20@CtcMediaboy— R.Seenu Ramasamy (@seenuramasamy) August 28, 2021
நடிப்பு, இசை என இரண்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். அவர் நடிப்பில் தற்போது Bachelor என்ற திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. 2019ம் ஆண்டு வெளிவர வேண்டிய ஐயங்கரன் திரைப்படமும் இந்த மாதம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் ஜெயில், அடங்காதே திரைப்படங்களும் இந்த வருடத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQY