நெற்றியில் குங்குமத்துடன் நயன்தாரா! திருமணம் முடிந்ததா?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இணையத்தில் பரவியுள்ள ஒரு வீடியோ குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2022, 11:14 AM IST
  • நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக இருந்து வருகிறார்.
  • இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.
  • சமீபத்தில் இருவரும் கோவிலுக்கு சென்றனர்.
நெற்றியில் குங்குமத்துடன் நயன்தாரா! திருமணம் முடிந்ததா? title=

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவின் திருமணம் குறித்த எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது.  சில காதல் முறிவிற்கு பின் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக இருந்து வருகிறார்.  நீண்ட காலமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள்.  இருப்பினும் இருவரும் அவர்களது திருமணம் குறித்து சரியான தகவல் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர்.  இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவியுள்ள ஒரு வீடியோ இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.   

மேலும் படிக்க | அடேங்கப்பா..சமந்தாவோட ஒரு கவுன் இவ்ளோ விலையா?

அப்படி அந்த வீடியோவில் என்னதான் இருக்கிறது என்றால், அடிக்கடி ஜோடியாக கோவில்களுக்கு செல்லும் இவர்கள் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு வழிபட சென்று இருக்கிறார்கள்.  நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியை கண்ட ரசிகர்கள் ஆர்வமாய் வந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.  நயன்தாராவை சுற்றி ஒரு கூட்டமே முட்டிமோதிக்கொண்டு நிற்கிறது, அவ்வளவு கூட்டத்திலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை பத்திரமாக பாதுகாத்து கொண்டு இருக்கிறார்.  இதெல்லாம் வழக்கமாக நடக்கும் விஷயம் தான், அந்த வீடியோவில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் நயன்தாரா உச்சந்தலையில் குங்குமம் வைத்திருக்கிறார், திருமணம் ஆன பெண்கள் மட்டுமே அந்த இடத்தில் குங்குமம் வைக்கும் நிலையில் நயன்தாரா குங்குமம் வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@na

இந்த வீடியோவை பார்த்த சிலர் திருமணம் ஆனதை அதிகார்பூர்வமாக அறிவியுங்கள் என்றும், சிலர் வாழ்த்துக்கள் கூறியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  அவ்வளவு கூட்டத்திலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை அரவணைப்புடன் அழைத்து சென்ற நிகழ்வு அனைவரையும் ரசிக்க செய்துள்ளது, இவர் நயன்தாரா மீது எவ்வளவு பாசமாக இருக்கிறார் என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  சில ரசிகர்கள் குழப்பத்திலும், சில ரசிகர்கள் உற்சாகத்திலும், சிலர் எப்போது திருமணம் ஆனதை உறுதிப்படுத்துவார்கள் என்றும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க | இதுவரை பெண்களுக்கெதிரான குற்றங்களை வெளிக்காட்டிய திரைப்படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News