Jigarthanda Doube X: ஜிகிர்தண்டா 2 ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்..படு குஷியில் ரசிகர்கள்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகிர்தண்டா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : May 16, 2023, 09:05 AM IST
  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், ஜிகிர்தண்டா.
  • இதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
  • எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
Jigarthanda Doube X: ஜிகிர்தண்டா 2 ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்..படு குஷியில் ரசிகர்கள்! title=

சித்தார்த் ஹீரோவாக நடித்த ஜிகிரிதன்டா திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியாகி பலத்த வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகிர்தண்டா Double X என்ற படத்தினை இயக்குகிறார். இதன் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

தீபாவளிக்கு ரிலீஸ்;

ஜிகிர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் படக்குழு குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதிக்காகவும் டீசர் ரிலீஸிற்காகவும் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மாலை 4 மணிக்கு படத்தின் அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார். 4 மணிக்கு அப்டேட் எதுவும் வரவில்லை என்றாலும், சொன்னது போலவே படத்தின் அப்டேட்டை கொடுத்த கொடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். ஜிகிர்தண்டா 2 படத்தின் புதிய போஸ்டரையும் அந்த போஸ்டருக்கான டீசரையும் வெளியிட்டிருந்தார் அவர் வெளியிட்டிருந்தார்.  இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து, ஜிகிர்தண்டா Double X படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவை ஜெயிக்க வைத்து அதிர்ச்சி கொடுத்த சிதம்பரம்.‌. நடித்தது என்ன

 

ராகவா லாரன்ஸ்-எஸ்.ஜே சூர்யா கூட்டணி:

ஜிகிர்தண்டா 2 படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள் என ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்தது. இதையடுத்து, எஸ்.ஜே சூர்யாவும் ராகவா லாரன்சும் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போல உள்ள போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரித்துள்ளது. ஜிகிர்தண்டா 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மாெழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜிகிர்தண்டா முதல் பாகத்தின் தொடர்ச்சியா? 

2014ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருந்த ஜிகிர்தண்டா முதல் பாகத்தின் கதை, தற்போது வெளியாகவுள்ள அதன் இரண்டாம் பாகத்தில் தொடருமா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. ஆனால், ஜிகிர்தண்டா Double X திரைப்படம், முதல் பாகத்தின் முன்கதையாக (Prequel) இருக்கும் என கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ்ஜிற்கு ஜிகிர்தண்டா படம் எப்படி நல்ல பெயரை பெற்று தந்ததோ, அதே போல இந்த படமும் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு வரிசை கட்டி நிற்கும் படங்கள்!

இந்த வருட தீபாவளிக்கு ஏற்கனவே பல படங்கள் ரிலீஸிற்கு ரெடியாக உள்ளன. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள அயலான், கார்த்திக் நடித்துள்ள ஜப்பான், எப்போதோ ரிலீஸாக வேண்டிய சிவகார்த்திகேயனின் அயலான் என இந்த தீபாவளி ரிலீஸிற்கு படத்திற்கு பஞ்சமில்லாமல் உள்ளது. இந்த தீபாவளி ரிலீஸ் லிஸ்டில் இப்போது கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஜிகிர்தண்டா 2 படமும் இணைந்துள்ளது. அனைத்துமே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்பதாலும், நல்ல படைப்பாளர்களின் கைகளால் உருவாகியிருக்கப்படும் படங்கள் என்பதாலும் இந்த தீபாவளி ரிலீஸ்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | Keerthy Suresh: “தாய் இல்லாமல் நான் இல்லை” வித்தியாசமாக மதர்ஸ் டே வாழ்த்து சொன்ன கீர்த்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News