லியோவில் இணைந்த விக்ரம் படத்தின் நடிகை! அப்போ LCU கன்பார்ம்தானா?

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.  60 நாட்கள் இன்னும் படப்பிடிப்பு உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 12, 2023, 08:01 AM IST
  • சென்னையில் லியோ படப்பிடிப்பு.
  • 60 நாட்கள் நடைபெற உள்ளது.
  • அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாகிறது.
லியோவில் இணைந்த விக்ரம் படத்தின் நடிகை! அப்போ LCU கன்பார்ம்தானா? title=

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கி உள்ளது.  இதற்கு முன்பு முடிந்த காஸ்மீர் ஷெட்யூல் போலவே இதுவும் நீண்ட நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. காஷ்மீரில் இரண்டு மாத காலம் தங்கியிருந்து முக்கியமான காட்சிகளை படமாக்கி உள்ளனர்.  இதனால் படக்குழுவிற்கு சிறிது நாட்கள் இடைவெளி விடப்பட்டது.  மீண்டும் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த தயாரிப்பு குழு திட்டமிட்டபோது விஜய், அங்கு வேண்டாம், சென்னையில் படப்பிடிப்பை நடத்துங்கள் என்று கூறி உள்ளார்.  அதன் படி தற்போது சென்னையில் லியோ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | விடுதலை பார்ட் 2-க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! வெளியாவதில் சந்தேகம்!

'லியோ' படம் லோகேஷ் கனகராஜின் LCU-ல் வருமா, வராதா என்று இணையத்தில் விஜய்யின் ரசிகர்கள் தினமும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.  அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் அன்று தான் இதற்கான விடை தெரியவரும் என்று லோகேஷ் முன்பு தெரிவித்து இருந்தார். லோகேஷ் கனகராஜின் 'கைதி'-ல் இருந்து ஜார்ஜ் மரியன்னையும், 'விக்ரம்' படத்தில் இருந்து ஏஜென்ட் டினா வசந்தியும் விஜய்யின் லியோ படைப்பிடிப்பில் காணப்பட்டனர்.  விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிப்பதற்கும், டப்பிங் கொடுப்பதற்கும் மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ படத்தின் செட்டில் இருந்து நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் கௌதம் வாசுதேவ் மேனனுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

maya

பிரபல நாடகக் கலைஞரான மாயா எஸ் கிருஷ்ணன் 'விக்ரம்' படத்தில் கால் கேர்ளாக தோன்றி கமல்ஹாசன் மற்றும் ஃபகத் பாசில் இருவருடனும் இரண்டு முக்கியமான காட்சிகளில் நடித்து இருந்தார்.  இந்நிலையில் கவுதம் மேனனுடன் அவர் இருக்கும் புகைப்படம் 'லியோ; LCUன் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்துகிறது. 'லியோ' படம், 'கைதி' மற்றும் 'விக்ரம்' ஆகிய இரண்டு படங்களுக்கும் முன்னோடியாக இருக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படக்குழுவில் இருந்து இது குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை.  அனிருத் இசையமைக்கும் 'லியோ' படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடிக்க, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் கதிர், பிரியா ஆனந்த், சாண்டி, மேத்யூ தாமஸ், பேபி ஆண்டனி, அபிராமி வெங்கடாசலம், மனோபாலா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | விஜய்யின் லியோ படத்தில் தனுஷ்? வெளியானது உண்மை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News