டைனோசர் கால உயிரினத்தை கண்டுபிடித்த இந்தியர்.. புகழ்ந்து தள்ளிய டைட்டானிக் பட ஹீரோ!

டைனோசர் காலத்தில் வாழ்ந்த அரிய வகை உயிரினம் ஒன்றை கண்டுபிடித்த இந்தியரை ஹாலிவுட்  நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பாராட்டியுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Jul 30, 2023, 06:30 PM IST
  • இந்தியாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானியை ஹாலிவுட் நடிகர் டி காப்ரியோ பாராட்டியுள்ளார்.
  • கேரளாவை சேர்ந்த அவர் அரிய வகை உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார்.
  • இதற்காக டிகாப்ரியோ அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
டைனோசர் கால உயிரினத்தை கண்டுபிடித்த இந்தியர்.. புகழ்ந்து தள்ளிய டைட்டானிக் பட ஹீரோ! title=

டைனோசர் காலத்தில் வாழ்ந்த அரிய வகை உயிரினம் ஒன்றை கண்டுபிடித்த இந்தியரை ஹாலிவுட்  நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ தனது சமூக வலைதளத்தில்  குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். தற்போது இந்த விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது

கேரளாவை சேர்ந்த நபர்:

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஆபிரகாம்.  இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார் அப்போது நீர் நிரம்பி இருந்த வாளியில் சிவப்பு நூல் போன்று மீன் வடிவத்தில் இருந்த ஏதோ ஒரு பொருள் அவரது கண்ணில் தென்பட்டது உடனே அதை உற்று நோக்கிய ஆபிரகாம் அது நகர்வதைக் கண்டு வியப்படைந்துள்ளார்.சட்டென்று அதனை பிடித்து ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் நிரப்பி அடைத்து வைத்து விட்டு கடல் சார் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் ஆபிரகாம் வீட்டு கிணறு மற்றும் தண்ணீர் தொட்டியில் இருந்து அதே வகையான மேலும் 4 மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆபிரகாம் வீட்டில் பிடிபட்ட அந்த மீன்கள் Pathaala eel loach என்ற  மீன் இனத்தை சேர்ந்தவை.

மேலும் படிக்க | ‘எதிர்நீச்சல்’ தாெடரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்..? இதோ முழு விவரம்..!

அரிய வகை உயிரினம்:

இந்த உயிரினம் கிட்டத்தட்ட 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது அதாவது டைனோசர் வாழ்ந்த காலத்தில் இந்த உயிரினமும் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.இந்த Pathaala eel loach என்ற மீன் இனத்தின் தனித்துவமான சிறப்பு அம்சம் என்னவென்றால் இது நிலத்தடி நீரில் வாழக்கூடியவையாம். இதனால் அவை தற்செயலாக குழாய் வழியாக வெளியில் வரும்போது நம்மால் அதை பிடிக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வகை மீன் இனங்கள்  17 இல் இருந்து 18 வகை வரை உள்ளன என்றும் அதில் குறைந்த பட்சம் 11 மீன் வகைகள் கேரளாவில் தான் உள்ளது என்றும் கேரளாவை சேர்ந்த கடல் சார் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

ஆபிரகாம் Pathala eel loach என்ற மீன் இனத்தை கண்டுபிடித்தது ஆரம்பம் முதலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது இந்த சூழ்நிலையில் இந்த விஷயம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட ஹாலிவுட் நட்சத்திரமும் டைட்டானிக் பட புகழ் நடிகருமான லியானார்டோ டிகாப்ரியோ  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது  உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.லியானார்டோ டிகாப்ரியோவை பொறுத்தவரை அவர் சுற்றுச்சூழல் ஆர்வலராக  நிறைய விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ள டி காப்ரியோ, அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | பேய் பட பிரியரா நீங்கள்? தைரியம் இருந்தால் இந்த 5 படங்களை இரவில் தனியாக பாருங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News