மாரி 2: இன்று மாலை 6 மணிக்கு புதிய அறிவிப்பு!!

Last Updated : Sep 28, 2017, 01:27 PM IST
மாரி 2: இன்று மாலை 6 மணிக்கு புதிய அறிவிப்பு!! title=

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஹிட் படம் மாரி. 

இதையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் பாலாஜி மோகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் முதல் மாரி 2 அப்டேட். டோவினோ தாமஸை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நான் எழுதியதில் என் மனசுக்கு பிடித்த கதாப்பாத்திரம்​ என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், தற்போது பாலாஜி மோகனின் மாரி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது என்று இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக இயக்குனர் பாலாஜி மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் டிவிட் செய்துள்ளார்.

 

 

Trending News