மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராகவும் கலைஞராகவும் வலம் வருபவர், கொல்லம் சுதி. இவர், பல டி.வி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது பிரபலமான மிமிக்கிரி திறமை மூலம் பிரபலமானார்.
அதிகாலையில் விபத்து!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கைப்பமங்களம் என்ற இடத்தில், கொல்லம் சுதி காரில் சென்றுள்ளார், அப்போது எதிர்பாராத விதமாக அதிகாலை 4:30 மணியளவில் இவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், கொல்லம் சுதிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை கொடுங்கலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஏற்கனவே அடி பலமாக இருந்ததால், அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துவிட்டார்.
வீடு திரும்புகையில் சோகம்:
கொல்லம் சுதி, தனது குடும்பத்தினருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார். வடகரா என்ற பகுதியில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடும்பத்தினரை பார்ப்பதற்காக வீடு திரும்புகையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தின் போது, கொல்லம் சுதியுடன் பணித்த அடிமலு, உலாஸ் மற்றும் மகேஷ் என்ற இன்னும் மூன்று மிமிக்கிரி கலைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!
ரசிகர்கள் அதிர்ச்சி:
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘காந்தாரி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்,கொல்லம் சுதி. மேலும், 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்', 'குட்டநாடன் மர்ப்பப்பா', 'கேசு ஈ வீட்டை நாடன்', 'எஸ்கேப்', 'ஸ்வர்கத்திலே காட்டுறும்பு' ‘கொல்லம்’ உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாக தனது மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தி மிகவும் பிரபலமடைந்தார். பல்வேறு சினிமா நட்சத்திரங்களுடன் நல்ல நட்பு பாராட்டினார். மலையாள சினிமா நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ, அதே அளவிற்கு இவருக்கும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் இன்று அதிகாலை உயிரிழந்த செய்தியை கேட்டதிலிருந்து ரசிகர்கள் பலர் மீளமுடியாத சோகத்தில் உள்ளனர்.
பிரபலங்கள் இரங்கள்:
39 வயது நிரம்பிய கொல்லம் சுதி உயிரிழந்தது, அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியிருக்கும் நிலையில், பல திரைப்பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவருடன் பணியாற்றிய பல பிரபலங்களும் தொலைக்காட்சி நட்சத்திரங்களும் அவருக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, நடிகரின் நல்லடக்கம் மற்றும் இறுதிசடங்கு குறித்த செய்திகள் வெளியாகவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ