சமீபத்தில் லியோ படத்தில் நடித்து இருந்த நடிகர் மன்சூர் அலிகான், சில நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து தகாத வகையில் பேசியிருந்தார். இது மிகப்பெரிய விவகாரமாக வெடித்தது. திரிஷா முதலில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க, தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், மன்சூர் அலிகான் இன்று மீண்டும் பத்திரிகையாளரை சந்தித்து விளக்கம் அளித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன் வந்து இந்த விவகாரம் குறித்து பேசி உள்ளது. இந்நிலையில், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பில், தலைவர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த தேசிய மகளிர் ஆணையம்-தாமாக முன் வந்து வழக்கு பதிவு!
இந்த அறிக்கையில், "பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத் தக்கது. அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை.
சில மேடைகள்...சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது. நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார். இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில் , தானாக முன்வந்து திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல். மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள... உணர்ந்துகொள்ள … பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம். கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கோடோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
A letter from our Association & President @offBharathiraja sir on the speech by Thiru #MansoorAliKhan . We seek respect from everyone to fellow actors & technicians pic.twitter.com/X3XBlreDMa
— Tamil Film Active Producers Association (@tfapatn) November 21, 2023
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ