‘தாரை தப்பட்டை’ படத்தில் இயக்குனர் பாலாவிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கீரா ராஜ்புத். இவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் "நர்மதா".
பெண்மையை மையப்படுத்தி உறுவாகும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா நடிக்கின்றார்.
தாய்க்கும் - மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை, ஒரு பயணத்தின் வழியாக நெகிழ்ச்சியாகச் இப்படம் சொல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் 7 வயது ஆண் குழந்தைக்கு நந்திதா அம்மாவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Happy to b associated with this lovely team for a female oriented script #Narmatha
shoot starts from today #Excited #nagercoil #Femaleoriented pic.twitter.com/BJWh36z0Ly— Nanditaswetha (@Nanditasweta) May 15, 2018
இவருடன் விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்படிப்பு இன்று நாகர்கோவிலில் துவங்கியதாக நடிகை நந்திதா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்!