Radhika And Sarathkumar Love Story: தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பம்பட்ட ஜோடிகளாக இருப்பவர்கள், ராதிகா-சரத்குமார். பல படங்களில் இணைந்து நடித்த இவர்களுக்குள், காதல் மலர..அது திருமணத்தில் முடிந்தது. இவர்கள், தங்கள் காதல் கதை குறித்து ஒரு நேர்காணலில் மனம் திறந்துள்ளனர். அது என்ன என தெரிந்து கொள்வோம் வாங்க.
காதலில் விழுந்தது எப்படி?
தாங்கள் காதலிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு நல்ல நண்பர்களாக இருந்ததாக கூறியிருக்கிறார், ராதிகா. இருவரும் சேர்ந்து பல சமூக நலப்பணிகள் செய்து, கார்கில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டியதாக கூறும் ராதிகா, தங்களுடன் அரவிந்த் சுவாமியும் எப்போதும் கூடவே இருப்பார் என கூறியிருக்கிறார். தாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது அது காதலினால் ஏடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும், அதுதான் நடைமுறையில் சரியாக இருக்கும் முடிவாக தெரிந்தததாகவும் ராதிகா கூறினார்.
திருமணத்திற்கு பிறகுதான் காதல்..
தங்களின் காதல் குறித்து பேசும் சரத்குமார், திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் தாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றவில்லை என்றும், 7-8 வருடங்கள் நல்ல நண்பர்களாக இருந்த இருவர் திருமணம் செய்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். திருமணத்திற்கு பிறகுதான் தங்களுக்குள் காதல் வளர்ந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவாகரத்து டூ காதல்..
ராதிகா, முதலில் 1985 முதல் 1986 வரை பிரபல நடிகர் பிரதாப் போத்தனுடன் திருமண உறவில் இருந்தார். இது ஓராண்டிற்குள் விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு, ரிச்சர்ட் ஹார்டி என்பவரை 1990ஆம் ஆண்டு கரம் பிடித்தார். இந்த உறவும், 1992ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து சரத்குமாரை 2001ஆம் ஆண்டு கரம் பிடித்தார்.
சரத்குமார், சாயா என்பவரை 1984ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இது, 2000ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து ராதிகாவை 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க | Lal Salaam OTT: ‘லால் சலாம்’ படம் எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ்? இதோ முழு விவரம்!
சினிமாவில் சக்ஸஸ்ஃபுள்ளாக இருக்கும் ஜோடிகள்:
ராதிகா-சரத்குமார், இருவருமே தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமன்றி, சினிமா வாழ்க்கையிலும் டாப் நடிகர்களுடன் ஒன்றாக சேர்ந்து நடித்து வருகின்றனர். ராதிகா ஒரு பக்கம் அம்மா வேடங்களில் நடிக்க, சரத்குமார் ஹீரோவுக்கு இணையான முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது படங்கள் குறித்து பேசுவதாகவும், இருவரின் படங்களையும் தியேட்டருக்கு சென்று பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இருவரின் மாறுபட்ட நடிப்பு..
ராதிகா-சரத்குமார் இருவருமே திறமையான நடிகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ராதிகா, டைலாக்கை ஒரு முறை படித்து விட்டு நடிக்க சென்று விடுவாராம். ஆனால் சரத்குமார், மீண்டும் மீண்டும் தனது டைலாக்கை படித்து அதை சரியாக கூற வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவாராம். இதனால் இவரும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ