ரஜினிகாந்தின் 170வது படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரியில் நடந்தது. அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் லியோ படம் குறித்து பேசினார்.
லியோ படம் குறித்து ரஜினிகாந்த்:
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது. இப்படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் லியோ படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அப்படம் மிகப்பெறிய வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. மேலும், கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் குறித்து ரஜினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “புவனா ஒரு கேள்விகுறி படத்திற்கு பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பிற்காக 1977-ம் ஆண்டு வந்தேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள். எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை” என்று குறியுள்ளார்.
அடித்துக்கொள்ளும் ரஜினி-விஜய் ரசிகர்கள்:
அஜித்-விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடித்துக்கொண்ட காலம் மாறி, ரஜினி-விஜய் ரசிகர்கள் தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் வசை பாடும் காலம் வந்து விட்டது. காரணம், “அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?” என்ற கேள்வி வரும் போதெல்லாம் பலர் விஜய்யை கைகாட்டுவதுதான். இது, பல ரஜினி ரசிகர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால், விஜய்யின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவரை பற்றி தவறான கருத்துக்கள் கூறுவதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். விஜய் ரசிகர்களும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் பட ரிலீஸின் போது, வேண்டுமென்றே படத்திற்கு சில நெகடிவ் விமர்சனங்களை படத்தை கூட பார்க்காமல் கொடுத்து வந்தனர். இதனால், விஜய்-ரஜினி ரசிகர்களிடையே சண்டை மாண்டது. போதாக்குறைக்கு, ரஜினியும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் “காக்கா கழுகு” என ஓரு பொதுமையான கதையை கூறினார். இதை பார்த்த ரசிகர்கள், “இவர் மறைமுகமாக விஜய்யைதான் குறிப்பிடுகிறார்” என ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.
மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரஜினிக்கும் விஜய்க்குமான உறவு..!
ரசிகர்கள்தான் இப்படி ஒரு பக்கம் அடித்துக்கொள்கிறார்களே தவிர, விஜய்க்கும் ரஜினிக்கும் தனிப்பட்ட அளவில் எந்த பிரச்சனையும் இல்லை. விஜய்யே சில நேர்காணல்களில், “ஒரே சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினி மட்டும்தான்” என்று கூறியுள்ளார். பல ஹீரோக்களின் படங்களில் ரஜினிகாந்தின் படங்கள் ரெஃபெரன்ஸ் ஆக காண்பிக்கப்பட்டிருக்கும். அது போல, விஜய்யின் பல படங்களிலும் அப்படி காட்டப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் அவரவர் படங்கள் வெளியாகும் போது வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதும் உண்டு என கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், தேவையில்லாத பகையை விஜய்-ரஜினியின் ரசிகர்கள்தான் வளர்த்துக்கொள்கிறார்கள் என்பது சிலரது கருத்தாக உள்ளது.
விஜய்யின் இயக்குநர்களுடன் பணிபுரியும் ரஜினி:
தனக்கு ஏதுவான இயக்குநர்களுடன் கடந்த பல ஆண்டுகளாக பணி புரிந்து வந்த ரஜினிகாந்த், தனது ட்ரெண்டை மாற்றிக்கொண்டு பல இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். குறிப்பாக அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பல கோடிகள் வசூல் செய்த ’ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு முன்னாள் அவர் இயக்கிய படம், பீஸ்ட். அதில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். அடுத்து ரஜினி தனது 171ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர், விஜய்யை வைத்து ஏற்கனவே மாஸ்டர், லியோ ஆகிய படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க | நெல்லையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 170 படம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ