பாப் கார்ன் மட்டுமில்ல; கொழுக்கட்டை சாப்பிட்டுக்கிட்டும் ‘விருமன்’ பாக்கலாம்!- ஏன்?

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2022, 06:27 PM IST
  • சுல்தானைத் தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
  • விருமன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு
  • விருமன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் அதிதி.
பாப் கார்ன் மட்டுமில்ல; கொழுக்கட்டை சாப்பிட்டுக்கிட்டும் ‘விருமன்’ பாக்கலாம்!- ஏன்? title=

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் எனும் படத்தில் தற்போது நடித்துவருகிறார். 

குட்டிப்புலி புகழ் இயக்குநர் முத்தையா இயக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.  இந்தப் படம் மூலம் கதாநாயகியாக சினிமா உலகுக்கு அறிமுகமாகவுள்ளார் அதிதி ஷங்கர். 

2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் இதைத் தயாரித்துவருகின்றனர். யுவன் இதற்கு இசையமைத்துவருகிறார். நடிகர் கார்த்தி இயக்குநர் முத்தையாவுடன் ஏற்கெனவே இணைந்து கொம்பன் எனும் படத்தைக் கொடுத்துள்ளார்.

 

மேலும் படிக்க | ‘சூப்பர் ஒயிட்’! - இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அந்த வகையில் இந்தக் காம்போவுக்கு இது இரண்டாவது படம். சுல்தான் மற்றும் புலிக்குத்திப் பாண்டி ஆகிய படங்களுக்குப் பின் இருவருக்குமே எந்தப் படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இருவருக்கும் படங்கள் வெளியாகி ஓராண்டைக் கடந்துள்ளதால் விருமன் எப்போது வரப்போகிறது எனும் கேள்வி இருந்துவந்தது.

                                    

இந்நிலையில் அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | ராம் சரணுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? - விஜய் படம் கைவிடப்படுகிறதா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News