சந்தானத்தின் மற்றொரு செய்கை! குலு குலு திரை விமர்சனம்!

ரத்தினகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குளு குளு திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 31, 2022, 11:06 AM IST
  • சந்தானம் நடித்துள்ள குளுகுளு படம் இன்று வெளியாகி உள்ளது.
  • ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
  • சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
சந்தானத்தின் மற்றொரு செய்கை! குலு குலு திரை விமர்சனம்! title=

காமெடியனாக தனது சினிமா வாழ்க்கை தொடங்கி தற்போது ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சந்தானம். கதையின் நாயகனாக நடித்து தற்போது ஆக்சன் கதாநாயகனாக உருவாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.  மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்தனகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள குளுகுளு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதுல்யா சந்திரன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், ஜார்ஜ் மரியான், சாய் தீனா, மாறன் என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரெட் ஜெய்ன்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.

gulugulu

மேலும் படிக்க | ராகவா லாரன்ஸ் பாதையில் விஜய் சேதுபதி! கை கொடுக்குமா திகில்

அமேசான் காடுகளில் வாழ்ந்து வரும் சந்தானம் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அங்கிருந்து விரட்டப்படுகின்றனர். அவர்களின் சந்தானம் மட்டும் உயிர் பிழைத்து நாடு நாடாக சுற்றுகிறார், கடைசியில் சென்னையில் வசித்து வருகிறார்.  இவர் யாருக்கேனும் உதவி செய்தால் அது அவருக்கே தீங்காக விளைகிறது. அந்த வகையில் ஒருவரை காப்பாற்ற செல்லும்போது அதனால் இவருக்கு ஏற்படும் விளைவுகள் தான் குளு குளு படத்தின் ஆன்லைன் என்று சொல்லலாம். இதனுள் பல கிளைக் கதைகள் ஒன்றாக சேர்ந்து சந்தானத்திடம் முடிவடைகிறது.

gulugulu

டார்க் ஹியூமரை மையமாக வைத்து இந்த கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் ரத்தினகுமார்.  அது கதையில் சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும், பல இடங்களில் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்துள்ளது. படத்தை காமெடி மூடில் கொண்டு செல்ல திட்டமிட்டு ஆங்காங்கே சில சீரியஸான காட்சிகள் வைத்தாலும் அதற்கு சிரிப்பதா அல்லது என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போகின்றனர்.  சில படங்களிலிருந்து பேமஸான காட்சிகளை வைத்து காமெடியாக மாற்ற டிரை பண்ணி அது கடைசியில் பல்பாகவே அமைந்துள்ளது.  

gulugulu

இரண்டாம் பாதியில் இருந்து கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமலே அது ஒரு புறம் செல்ல ரசிகர்கள் மறுபுறம் குழம்பி போய் நிற்கின்றனர்.  படத்தில் சந்தானத்திற்கு எதற்கு இந்த கெட்டப் என்றும் தெரியவில்லை, படம் முழுக்க அரை தூக்கத்தில் இருப்பவர் போலவே உள்ளார். இது படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை.  கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத திரைக்கதையில் அட்லீஸ்ட் சிரிப்பு வரும் அளவிற்கு ஆவது கதை இருந்திருக்கலாம்.  சந்தோஷ் நாராயணனின் இசையில் சுமாரான காட்சிகள் கூட சாதாரண காட்சியாகவே தெரிகிறது.  சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் சரியாக ஓடாத நிலையில் அந்த படங்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு குளு குளு அமைந்துள்ளது.

மேலும் படிக்க | பிக்பாஸ் அனிதா சம்பத் வாங்கியுள்ள புதிய பிரம்மாண்ட வீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News