சீதா ராமன் அப்டேட்: சீதா வைக்கப் போகும் செக்மேட்.. எதிர்பாராத ட்விஸ்ட்

Seetha Raman Today's Episode Update: ரிலீஸான சேது, சுபாஷ்.. சீதா வைக்கப் போகும் செக்மேட் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2023, 12:03 PM IST
  • ராமின் தங்கைகளை நம்ப வைக்கும் துரை.
  • ஸ்வீட் செய்யும் சீதா.
  • ஸ்டேஷனுக்கு போன மகா, அர்ச்சனா.
சீதா ராமன் அப்டேட்: சீதா வைக்கப் போகும் செக்மேட்.. எதிர்பாராத ட்விஸ்ட் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சத்தியன் மற்றும் மீராவுக்கு நிச்சயதார்த்தம் செய்ய சீதா திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ராமின் தங்கைகளை நம்ப வைக்கும் துரை

துரை வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்க ராமின் தங்கைகள் மூவரும் அப்பாவும் சித்தப்பாவும் வீட்டுக்கு வருவதால் தான் இந்த அலங்காரம் என நினைத்துக் கொள்ள துரை ஆமாம் ஆமாம் என்று அவர்களை நம்ப வைக்கிறார். 

சீதா இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டே அவளும் அப்படியே பில்டப் செய்கிறார். அதன் பிறகு மகாவும் அர்ச்சனாவும் ஸ்டேஷனுக்கு கிளம்பி வெளியே வர அலங்காரத்தை பார்க்க இந்த மூன்று பெண்களும் அப்பாவும் சித்தப்பாவும் வருவதால் தான் இந்த அலங்காரம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். 

ஸ்வீட் செய்யும் சீதா

சீதா ஸ்வீட் செய்து கொண்டு வர மகாவுக்கும் அர்ச்சனாவுக்கும் சந்தேகம் வர வீட்டுக்கு பெரியவங்க வராங்க இல்லையா அதனால ஸ்வீட் செய்து இருக்கேன் என்று சொல்லி சமாளிக்க நீ என்ன பண்ணாலும் உனக்கு இந்த வீட்ல இன்னைக்கு தான் கடைசி நாள் என்று வார்னிங் செய்துவிட்டு கிளம்ப ராம் ஐயரை கூட்டி வர சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. 

மேலும் படிக்க | புஷ்பா 2: ஃபஹத் ஃபாசிலின் புதிய லுக்.. பிறந்தநாளில் வெளியான தெறி போஸ்டர்!

ஐயர் வீட்டுக்கு முக்கியமான நபர்கள் வருவதால் நல்ல நேரத்தில் வரவேற்க வேண்டும் என வந்ததாக சொல்கிறார். சேதுவும் சுபாஷுக்காகவும் தான் இந்த ஏற்பாடு என மகாவும் நம்பி வெளியே கிளம்புகிறாள். 

அடுத்து சீதா மீராவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்க இதை பார்த்து பெண்களுக்கு சந்தேகம் வந்து எதுக்கு கல்யாண பெண் மாதிரி மேக்கப் போடுறீங்க என்று கேட்க இருவரும் முழிக்கின்றனர். அதோடு எனக்கும் மேக்கப் போடணும் உங்களுக்கும் மேக்கப் போடணும் என்று சீதா சமாளிக்க இல்லை இல்லை எங்களுக்கு சந்தேகமா இருக்கு, நாங்க மகாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு வரோம் என்று சென்று விடுகின்றனர். 

மீரா இவங்க மகா கிட்ட சொல்லி ஏதாவது பண்ண போறாங்க என்று சொல்ல சீதா அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறாள். 

ஸ்டேஷனுக்கு போன மகா, அர்ச்சனா

மறுபக்கம் ஸ்டேஷனுக்கு போன மகாவும் அர்ச்சனாவும் சுபாஷ் மற்றும் சேதுவை வரவேற்க அவர்கள் சீதா மீது பயங்கர கோபத்தில் இருக்கின்றனர். அவ என்ன பண்ணாலும் இன்னைக்கு அவள வீட்டை விட்டு வெளியே அனுப்பாம விடமாட்டேன் என்று சொல்கின்றனர். மறுபக்கம் சீதா ராமிடம் தங்கைகளை பற்றி சொல்ல அவன் நான் போய் என்னன்னு கேட்கிறேன் என்று கிளம்பிச் செல்கிறான்‌. 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்! அதுவும் இந்த தேதியிலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News