சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவுக்கு வந்த சந்தேகம்.. சீதாவிடன் உள்ள திட்டம் என்ன?

Seetha Raman Today's Episode Update: சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மகா.. மதுமிதாவுக்கு வந்த சந்தேகம் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2023, 11:05 AM IST
  • சூர்யா மீது சந்தேகப்படும் மதுமிதா.
  • என்னிடம் ஒரு திட்டம் உள்ளது: சீதா
  • சீதாவிடம் கோபம் காட்டும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவுக்கு வந்த சந்தேகம்.. சீதாவிடன் உள்ள திட்டம் என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலில் மதுமிதாவும் ராமும் அவனது அம்மாவின் கல்லறைக்கு வந்து சீதாவின் மீதான காதலை சொன்ன நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

சூர்யாவுக்கு எதிராக திட்டம் போடும் மகா

அதாவது மதுவும் ராமும் கல்லறைக்கு சென்றுள்ள நிலையில் இங்கே வீட்டில் மகா இதுக்கு அப்பறம் சூர்யா தான் கஞ்சாவை கடத்தியது என மதுமிதாவை நம்ப வைக்க வேண்டும், அதற்காக லாயர், ஹவுஸ் ஓனர் மற்றும் சூர்யாவின் கம்பெனி ஓனர் ஆகியோரை சூர்யாவுக்கு எதிராக பேச வைக்க வேண்டும் என திட்டம் போடுகிறாள். 

இவர்களின் திட்டத்தை அறிந்து கொள்ள துரை அங்கு வர மகா அவனை வெளியே அனுப்பி வைக்க துரை மீராவிடம் சென்று மகா சூர்யாவுக்கு எதிராக எதோ பிளான் பண்ணுறா என்ற விசயத்தை சொல்கிறான். அதற்கு அடுத்ததாக மதுவும் சூரியாவும் வீட்டுக்கு வர அப்போது அர்ச்சனா, சுபாஷ் ஆகியோர் மகா சூர்யாவை வெளியே எடுக்க ரொம்ப அலைஞ்சிட்டு இருக்கா என சொல்கின்றனர். 

மேலும் நீ எங்களோட வா லாயர், ஹவுஸ் ஓனர், சூர்யாவின் கம்பெனி ஓனர் ஆகியோரை பார்த்து சூர்யாவை வெளியே எடுக்க முயற்சி செய்யலாம் என சொல்ல மீரா அவங்க எதோ பிளான் பண்றாங்க, நீ போகாத என்று சொல்ல மது அவங்க சொல்றது சரி தானே, சூர்யாவை வெளியே எடுக்க நான் என்ன வேணாலும் செய்வேன் என அவர்களுடன் கிளம்பி செல்கிறாள். 

மதுவிற்கு அதிர்ச்சி அளித்த கம்பெனி ஓனர்

முதலில் சூர்யாவின் கம்பெனி ஓனரை சந்திக்க அவர் நான் சூர்யாவுக்கு பணம் கொடுக்கல, அவன் வேலைக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகல, அப்படி இருக்கும் போது எப்படி பணம் கொடுப்பேன் என்று சொல்ல மது அதிர்ச்சி அடைகிறாள். 

மேலும் படிக்க | Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்!

சூர்யா மீது சந்தேகப்படும் மதுமிதா

அதனை தொடர்ந்து ஹவுஸ் ஓனரை சந்திக்க அவர் உடனடியா நீங்க வீட்டை காலி பண்ணுங்க, நீங்க கொடுத்த 2 லட்சம் அட்வான்ஸ் பணம் கூட எனக்கு தேவையில்ல என தூக்கி போட இவ்வளவு பணம் எப்படி வந்தது என மதுவுக்கு சூர்யா மீது சந்தேகம் வருகிறது. சூர்யா கஞ்சா பிஸினெஸ் பண்ணி இருக்கான், ஆனால் இதுக்கெல்லாம் உங்க அப்பா தான் காரணமா இருப்பார் என மகா மதுமிதாவை ஏற்றி விடுகிறாள். 

என்னிடம் ஒரு திட்டம் உள்ளது: சீதா

அதை தொடர்ந்து சீதா வீட்டுக்கு வந்ததும் மீரா மகாவின் திட்டம் பற்றி சொல்ல இது இப்படி தான் நடக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியும், போராடி பார்க்கலாம், அப்படி இல்லனா என்கிட்டே ஒரு திட்டம் இருக்கு என்று சொல்கிறாள். பிறகு மதுவும் மகாவும் வீட்டுக்கு வந்து சீதாவிடம் நீ கஞ்சா வைக்கலைனு தெரிஞ்சிடுச்சி என்று மன்னிப்பு கேட்டு சூர்யா தான் கஞ்சா கடத்தி இருக்கான் என சொல்கின்றனர். 

சீதாவிடம் கோபம் காட்டும் ராம்

ஆனால் சீதா உங்க திட்டம் இது தானே, உனக்கு சூர்யா மேல நம்பிக்கை இல்லையா என மதுவை கேள்வி கேட்கிறாள். இதனால் ராம் நீ எதுக்கு எப்பவும் சித்தியை எதிர்த்து பேசிட்டு இருக்க என கோபப்படுகிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஜியோசினிமா செய்த மாஸ்டர் பிளான்! அமேசான், நெட்பிலிக்ஸ்க்கு பெரிய அடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News