ஒரே நாளில் வெளியாகும் செல்வராகவனின் இரு படங்கள்!

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் 'சாணிக்காயிதம்' படமும், 'பீஸ்ட்' படமும் ஏப்ரல்-14ம் தேதி வெளியாகவுள்ளன.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 07:47 PM IST
  • இயக்குனர் மற்றும் எழுத்தாளரான செல்வராகவன் தற்போது நடிகராகவும் புதிய பரிமாணத்தில் தோன்றியிருக்கிறார்.
  • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் 'சாணிக்காயிதம்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஒரே நாளில் வெளியாகும் செல்வராகவனின் இரு படங்கள்!  title=

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன் (Selvaragavan).  வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்குவதில் இவர் வல்லவவர்.  இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது பதிவிடும் கருத்துக்கள் பலவும் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கும். 

ALSO READ | 2023ம் ஆண்டு பொங்கலை பிரம்மாண்டமாக்கும் ஷங்கரின் படம்!

இயக்குனர் மற்றும் எழுத்தாளரான இவர் தற்போது நடிகராகவும் புதிய பரிமாணத்தில் தோன்றியிருக்கிறார்.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான 'பீஸ்ட்' (Beast movie) திரைப்படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்தப்படத்தின் மூலம் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் 'சாணிக்காயிதம்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவருடன் முன்னணி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.  இந்தப்படம் இவரது நடிப்பு திறமைக்கு நல்லதொரு அங்கீகாரத்தை தரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இப்படம் அமேசான் பிரைம் வீடியோ OTT இயங்குதளத்தில் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதியன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் செல்வராகவன் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தையும் படக்குழு ஏப்ரல் மாதம் 14ம் தேதியன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.  தற்போது செல்வராகவன் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' படமும், 'சாணிக்காயிதம்' படமும் ஒரே நாளில் வெளியாகபோவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.  மேலும் செல்வராகவன் அடுத்ததாக மோகன் ஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

ALSO READ | தனுஷின் வாத்தி படத்திலிருந்து விலகிய முக்கியமான நபர்! காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News