இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி அனைவராலும் பாராட்டவும்பட்டது. அதனையடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படமும் நன்றாக ஓட மாரி செல்வராஜ் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கிவருகிறார் மாரி. இப்படத்தின் மூலம் வைகைப்புயல் வடிவேலும் ரீ எண்ட்ரி கொடுக்கிறார்.
மேலும் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். முதல்முறையாக புதிய கூட்டணி உதயமாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்திருக்கிறது.
மேலும் படிக்க | ’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா - சூர்யா சொல்லும் வெளிநாடு
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் கீர்த்தி சுரேஷ் மற்றும், பகத் பாசில் இருவரும் தேதி கொடுத்தால்தான் நடக்கும்.
And its the end of #MAAMANNAN 2nd schedule! Last and final schedule will happen only if @KeerthyOfficial Mam and #fahadh give dates pls consider ! sorry @mari_selvaraj sir for all the torture and one mores ! Thx #MAAMANNAN team ! @RedGiantMovies_ pic.twitter.com/Mvy0BeQYkw
— Udhay (@Udhaystalin) June 23, 2022
அதை பற்றி கொஞ்சம் யோசிங்க. மாரி செல்வராஜ் சார் ஒன் மோர் காட்சிகளுக்கு சாரி. நன்றி மாமன்னன் படக்குழு” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கவியரசர் கண்ணதாசன் - காவிய தாயின் மூத்த மகன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR