‘ஜவான்’ படத்தில் விஜய் நடிக்காதது ஏன்..? அட்லீ விளக்கம்..!

Atlee about Vijay Cameo In Jawan: சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் ஜவான் படத்தில் விஜய்யை நடிக்க வைக்காதது ஏன் என அட்லீ விளக்கம் கொடுத்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Sep 17, 2023, 01:31 PM IST
  • அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் ஜவான் படம் வெளியாகியிருந்தது.
  • இதில் விஜய் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
  • விஜய், ஜவான் படத்தில் நடிக்காதது ஏன் என அட்லீ விளக்கம் கொடுத்துள்ளார்.
‘ஜவான்’ படத்தில் விஜய் நடிக்காதது ஏன்..? அட்லீ விளக்கம்..! title=

கோலிவுட் திரையுலகில், சில திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் பலரது மனங்களில் இடம் பிடித்தவர் அட்லீ. ராஜா ராணி படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது பாலிவுட் படம் ஒன்றை இயக்கி பான் இந்திய இயக்குநராக உருவாகியுள்ளார். ஜாம்பவான் இயக்குநர்களுள் ஒருவரான ஷங்கரின் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் அட்லீ.  நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். 

இந்தியா முழுவதும் பிரபலமான அட்லீ..!

‘பாலிவுட் பாட்ஷா’ என்று அழைக்கப்படுபவர், ஷாருக்கான். இவரை வைத்து அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இந்த படம் கடந்த 7ஆம் தேதி (செப்டம்பர்) வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிகில் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் படம் இது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஷாருக்கானிற்கு இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவில் பல காேடி ரசிகர்கள் உள்ளனர். இதனால் ஜவான் படம் வெளியான முதல் நாளிலேயே பல கோடி வசூலை பார்த்து விட்டது. 

விஜய் கேமியோ..

ஜவான் படத்தின் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியான போதிலிருந்தே, இதில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. ஷாருக்கான், அட்லீ மற்றும் விஜய் ஆகிய மூன்று பேரும் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமும் வெளியானது. இதனால், படத்தில் விஜய் இருப்பதை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் நம்பி விட்டனர். சில நெட்டிசன்கள் “விஜய்யின் கதாப்பாத்திரத்தின் பெயர் இதுதான், விஜய் படத்தில் 1 நிமிடத்திற்கு வருகிறார்” என கதை கட்டி விட்டனர். இதை ரசிகர்களும் நம்பி விட்டனர். ஆனால் படத்தில் விஜய் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை. 

மேலும் படிக்க | அட்லீ மனைவி செய்த காரியம் அதுவும் கீர்த்தியுடன், வைரலாகும் வீடியோ

விஜய் நடிக்காதது ஏன்..? 

நடிகர் விஜய் நடிக்காதது ஏன் என்பது குறித்து அட்லீ, சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில், விஜய்யையும் ஷாருக்கானையும் வைத்து படம் எடுக்க தனக்கு ஆசை இருப்பதாகவும், இருவருக்குமான கதையை கண்டிப்பாக தயார் செய்வேன் என்றும் கூறியுள்ளார். ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவருமே தன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நடிகர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ சம்பள விவரம்..!

இயக்குநர் அட்லீ ஷங்கரின் எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அந்த படங்களில் இருந்தே முன்னணி நடிகர்கள் பலர் இவரது திறமையை கண்காணித்து வந்தனர். அதனாலேயே இவருக்கு முதல் படத்திலிருந்து இப்போது வரை முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 41 கோடியை தாண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

‘ஜவான்’ திரைப் படத்தை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த படத்தை இயக்க அட்லீ எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த விவரம் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது அதன்படி, அட்லீ ஒரு படத்திற்கு 52 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. ஜவான் திரைப்படத்தை இயக்குவதற்காக இவரது சம்பளத்தை குறைத்துக்கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. 52 கோடியாக இருக்கும் இவரது சம்பளத்தை 30 கோடியாக குறைத்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டதாம். ஆனால் அட்லீ விடாப்பிடியாக தனது சம்பள தொகையில் நின்றதால் அவருக்கு அவர் கேட்ட தொகையே சம்பளமாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்திற்காக அட்லீ வாங்கிய சம்பளம் இவ்வளவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News