மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை கட்டுமானத் தளங்கள் போன்ற நேரடி சூரிய ஒளி படும் நிலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த விதியின் கீழ், கடுமையான வெயில் நிலவும் இந்த கால கட்டத்தில், தொழிலாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நேரடி சூரிய ஒளியில் தொழிலாளர்கள் பணி செய்ய மதியம் 12:30-3 மணி வரை அனுமதிக்கப்படாது.
இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கும், கோடை மாதங்களில் அதிக வெப்பநிலைகயினால் ஏற்படும் உடல் பாதிப்பு அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் ஆகும்.
தொடர்ந்து 18வது ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இந்த விதி அமல்படுத்தப்படும் நிலையில், இந்த விதியானது தொழிலாளர்கள் வெப்ப தாக்கம் மற்றும் சன் ரோக்கிற்கு ஆளாகும் நிகழ்வுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
மதிய இடைவேளை விதியை மீறும் நிறுவனங்கள் மீது, ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் என்ற அளவில் அபராதம் விதிக்கப்படும். மதிய இடைவேளையை மீறி பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால், அதிகபட்சமாக 50,000 திர்ஹம் என்ற அளவில் அபராதம் விதிக்கப்படலாம்.
குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய தடையை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து கூறிய மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின், கண்காணிப்பு அதிகாரி, முஹ்சின் அல் நாசி, தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இந்த வேலை தடை குறித்த முக்கியத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
வேலை தடை தொடர்பான விதி மீறல்கள் குறித்து புகார் அளிக்க திங்கள் முதல் சனி வரை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, அமைச்சகத்தின் அழைப்பு மையத்தின் 600590000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இது தொடர்பான அதிகார அமைப்பின் செயலியில் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR