21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. நேற்றோடு இந்த சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது. அந்த வகையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விபரம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
இண்டோ சினி அப்ரிசியேசன் என்ற அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு தமிழ்நாடு அரசுடன் இணைந்து வருடாவருடம் சர்வதேச திரைப்பட விழா நடத்தி வருகிறது. அதன்படி இந்த விழாவில் போட்டி பிரிவில் கிட்டத்தட்ட 12 தமிழ் படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டது.
சிறந்த தமிழ் திரைப்படம்: இயக்குனருக்கு ரூ.1.0 லட்சம் மற்றும் தயாரிப்பாளருக்கு ரூ.1.0 லட்சம் படம்: அயோத்தி
இரண்டாவது சிறந்த தமிழ் திரைப்படம்: இயக்குனருக்கு ரூ. 50,000/- மற்றும் தயாரிப்பாளருக்கு ரூ. 50,000/- படம்: உடன்பால்
சிறப்பு ஜூரி விருது: விருது பெறுபவருக்கு ரூ.50,000/- விடுதலை படத்தின் முதல் பாகம் இயக்குனர் வெற்றி மாறன்
சிறந்த நடிகர்: விருது பெறுபவருக்கு ரூ.50,000/- மாமன்னன் - நடிகர் வடிவேல்
சிறந்த நடிகை: விருது பெறுபவருக்கு ரூ.50,000/- அயோத்தி - செல்வி ப்ரீத்தி அஸ்ரானி
சிறந்த ஒளிப்பதிவாளர்: விருது பெறுபவருக்கு ரூ.50,000/- போர் தொழில் - கலைச்செல்வன் சிவாஜி
சிறந்த எடிட்டர்: விருது பெறுபவருக்கு ரூ.50,000/- போர் தொழில் - ஸ்ரீஜித் சாரங்
சிறந்த ஒலிப்பதிவாளர்: விருது பெறுபவருக்கு ரூ.50,000/- மாமன்னன் - சுரேன் ஜி
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது: செம்பி படத்தின் குழந்தை கலைஞரான நிலா