உடல் எடையை கட்டுப்படுத்த இரவு உணவுக்கு பின் செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு பெரிதாக இல்லாததால், நம்மில் பலர் உடல் எடையை குறைக்க அவதிபட்டு வருகிறோம். எனவே உடல் எடையை எப்படி குறைப்பது? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே இத்தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.
உடல் எடையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து நாம் அதை செய்ய நினைப்போம். ஆனால் உடல் எடையை கட்டுப்படுத்த உணவின் பழக்கவழக்கங்களும் முக்கியம். அதேபோல் உணவுக்கு பின்னர் செய்ய வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது. குறிப்பாக இரவு உணவுக்கு பிறகு சில பழக்கங்களை பின்பற்றுவது நமது உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கும்.
இரவு நேர உணவுக்கு பின்னர் 10ல் இருந்து 20 நிமிடங்கள் வரை லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது செரிமானத்தை மேம்படுத்தும். மேலும், சாப்பிட்ட பிறகு லேசான நடைப்பயிற்சி மேற்கொள்வது கூடுதல் கலோரிகளை எரிக்கிறது.
நம்மில் பலர் இரவு உணவிற்கு பின்னர் லேசான தின்பண்டங்கள் எடுத்துக்கொள்வதுண்டு. இதை சாப்பிடும் பழக்கம் இருந்தால், நம்மால் நிச்சயம் உடல் எடையை கட்டுப்படுத்த முடியாது. மேலும், இரவு உணவிற்கு பிறகு எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லதல்ல. எனவே தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
இரவு உணவிற்கு பிறகு இனிப்புகள் சாப்பிடுவதால் உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. இதனால் தூக்க இன்மை ஏற்படலாம். எனவே இரவு உணவுக்கு பிறகு இனிப்புகளை தவிர்ப்பது நல்லது.
இரவு உணவிற்கு பின்னர் உடலுக்கு நல்ல ஓய்வு தேவை. ஆனால் நம்மில் பலர் நீண்ட நேரம் மொபைல் போன், டிவி போன்றவற்றை பார்ப்பதுண்டு. இது தூக்கத்தை கெடுக்கும். எனவே உடலுக்கு நல்ல ஓய்வு அளிக்க வேண்டும். அதற்கு 7ல் இருந்து 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே ஆகும். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)