EPF வட்டி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது: வெளியேறுவது சரியா

புதுடெல்லி: EPF முதலீடுகளுக்கான வட்டி விகிதம், 8.5% இல் இருந்து 8.1% ஆக 2021-2022 நிதியாண்டில் குறைக்கப்பட்டது. இது நாற்பது வருடங்களில் மிகவும் குறைந்த வட்டி விகிதம் ஆகும்.

கடைசியாக, 1977-78 ஆம் ஆண்டில் 8.1% க்கும் குறைவான வட்டி விகிதம் 8% ஆக இருந்தது. இருப்பினும், பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் நேரத்தில், EPF முதலீடுகளில் குறைந்த வருமானம் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம்.

நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தால், EPF-ல் தொடர்ந்து சேமிப்பதைத் தொடர வேண்டுமா அல்லது திட்டத்திலிருந்து விலக வேண்டுமா என்று சிந்திக்கலாம். EPF திட்டத்தின் நன்மைகள், தீமைகள் தெரிந்துக் கொண்டு முடிவெடுக்கவும்.

1 /7

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது நல்ல சேமிப்பு முறையாகும். இது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அவர்களின் எதிர்காலத்திற்காக சேமிக்க உதவுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை வைப்பதன் மூலம் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை உருவாக்க இந்த திட்டம் உதவுகிறது. பணியாளர் மற்றும் முதலாளி இருவரும் இந்த சேமிப்புக் கணக்கில் பங்களிக்கின்றனர்.

2 /7

பணியாளர்கள் EPF திட்டத்தில் இருந்து விலகலாம், ஆனால் அதற்கு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உண்டு. முதல்முறையாக வேலைக்கு சேரும்போது ஊழியர்கள் EPF இல் பதிவு செய்ய வேண்டாம் என்று முதலாளியிடம் கேட்கலாம். மாத சம்பளம் ரூ. 15,000க்கு மேல் அடிப்படை+டிஏ (பிஎஃப் ஊதியம்) இருந்தால், அந்தத் திட்டத்திலிருந்து தனிநபர் விலகலாம். வேலை மாற்றத்தின் போது, ஒரு பணியாளர் EPF இல் பதிவு செய்ய வேண்டாம் என்று முதலாளியிடம் கேட்கலாம். இருப்பினும், பணியாளரிடம் ஏற்கனவே பிஎஃப் கணக்கு இல்லையென்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.

3 /7

EPF திட்டத்தில் முதலீடு செய்யும் பணியாளர்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். உதாரணமாக, EPFO வழங்கும் வட்டி விகிதம், 40 ஆண்டுகளில் மிகக் குறைவாக இருந்தாலும், FD திட்டங்களை விட அதிகமாகவே உள்ளது. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ஊழியர்கள் வரிச் சலுகைகளைப் பெறலாம். மேலும், EPF இல் முதலீடு செய்வது ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ், ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.

4 /7

EPFO சந்தாதாரர்களுக்கு ரூ. 6,00,000 வரையிலான இலவச காப்பீட்டு நன்மையும் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவதற்கு முன், ஊழியர் விபத்தில் இறந்தால், காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

5 /7

EPFO சந்தாதாரர்கள் அவசரக் கடனைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் உரிமைகோரல் படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் முன்பணத்தை எளிதாகக் கோரலாம்.

6 /7

EPF திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்தால் ஒரு ஊழியர் சம்பளம் அதிகமாக கிடைக்கும். ஆனால் சேமிப்பு குறையும். இது EPFO ஐ விட சிறந்த வருமானத்தை வழங்கும் அபாயகரமான சேமிப்பு கருவிகளில் முதலீடு செய்ய பயன்படுத்தப்படலாம்.

7 /7

EPFல் இருந்து வெளியேறும் ஊழியர்கள், முதலாளியின் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பங்களிப்பையும் இழக்க நேரிடும்.