திங்கட்கிழமையை உற்சாகமாக எதிர்கொள்ள 7 சிறந்த வழிகள்!!

7 Ways To Handle Monday Blues : திங்கட்கிழமை வந்தாலே நம்மில் பலருக்கு வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லவே தோன்றாது. இதை தடுக்க, நாம் சில ட்ரிக்ஸை கையாளலாம். அது என்ன தெரியுமா?

7 Ways To Handle Monday Blues : சனிக்கிழமை விடுமுறையில் இருந்து விட்டு, ஞாயிறு மாலை வந்தவுடன் ‘திங்கள் வரப்போகிறதே’ என்ற பயம் நம்மை தொற்றிக்கொள்ளும். அது ஏனோ தெரியவில்லை இது உலகளவில் அனைவருக்கும் இருக்கும் ஓரு பயமாகும். இதனை கையாள, நாம் சில வழிகளை பின்பற்றலாம். இதனால், பாசிடிவான மனதுடன் இந்த திங்களை நம்மால் எதிர்கொள்ள முடியும். அப்படி பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

1 /7

திங்களன்று என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள், என்ன சாப்பிட விரும்புகிறீர்கள், என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது, திங்களன்று ஏற்படும் சில மன அழுத்தங்களை தவிர்க்கலாம்.

2 /7

திங்கட்கிழமைக்கு முந்தைய நாள் 7-8 மணி நேரம் உறங்குங்கள். இது, மறு நாள் நல்ல மன நிலையுடன் எழுந்து கொள்ள உதவும்.

3 /7

உங்களுக்கு பிடித்த விஷயத்துடன் அந்த நாளை தொடங்குங்கள். அது ஒரு கப் காபியாக இருக்கலாம், அல்லது பிடித்த காலை உணவாக இருக்கலாம்.

4 /7

திங்களன்று நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை பிரித்து வைத்து செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் சிறு சிறு வேலைகளை முடித்த பின்னர் அதை டிக் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது உங்களுக்குள் நல்ல தைரியம் பிறகும்.

5 /7

உங்களை அழகாக உணர வைக்கும், தன்னம்பிக்கை ஊட்டும் ஆடைகளை உடுத்துங்கள். இது, உங்கள் மனநிலையை உயர்த்தும்.

6 /7

‘இந்த நாள் நன்றாக இருக்கும்’ என்ற எண்ணத்துடன் அந்த நாளை தொடங்குங்கள். எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும், முன்னேற வேண்டும் என்கிற எண்ணத்துடன் அந்த நாளை ஆரம்பியுங்கள்.

7 /7

உங்களுக்கு பிடித்தவர்களுடன் ஒரு சின்ன உரையாடலுடன் ஆரம்பியுங்கள். இதனால், உங்களின் திங்கட்கிழமை நல்ல தொடக்கத்துடன் இருப்பதுடன் உங்களுக்குள் அந்த நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கும்.