7 Simple Daily Activities To Remove Laziness : தற்போதைய உலகில், பலரும் சோம்பேறிகளாக மாறி விட்டனர். அவர்கள், ஆக்டிவாக இருக்க சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்ன தெரியுமா?
7 Simple Daily Activities To Remove Laziness : இந்த கால கட்டத்தில், கேட்கும் பொருட்கள் கேட்ட இடத்தில் கிடைத்து விடுகின்றன. இதனால், பல சமயங்களில் நாம் சோம்பேறியாக மாறிவிட்டோமோ என்ற எண்ணம் நமக்கே தோன்றும். இந்த நிலையில், அப்படிப்பட்ட பழக்கங்களை நாம் சில நடவடிக்கைகளை வைத்து தவிர்க்கலாம். அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் சிம்பிளானவைதான். அவை என்னென்ன தெரியுமா?
இந்த காலத்தில், பல்வேறு இளைஞர்கள் சோம்பேறிகளாக மாறிவிட்டதாக சில தரவுகள் கூறுகிறது. அதனை ஒழித்துக்கட்ட சில பழக்கங்கள் உதவும். அவற்றை, இங்கு பார்ப்போம்.
காலையில் உங்களுக்கென்று ஒரு ரொட்டீனை வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்து தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவைதான் அது.
ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால், அது 5 நிமிடத்தில் முடிந்து விடக்கூடிய வேலை என்றால், அதனை உடனே முடித்து விட வேண்டும்.
நீங்கள் வேலை செய்யும் அல்லது தினமும் இருக்கும் இடத்தை சுத்தமாக, ஒழுக்கமாக வைத்திருங்கள். அப்போதுதான் அந்த வேலையை கவனச்சிதறல் இல்லாமல் செய்து முடிப்பீர்கள்.
எந்த வேலையை முதலில் செய்து முடிக்க வேண்டும், எதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு, அதற்கு ஏற்றபடி முடிக்க வேண்டும்.
எப்போதும் அமர்ந்தே இருக்காமல், அடிக்கடி எழுந்து நடப்பது, கை-கால்களை நீட்டி மடக்குவது போன்ற நடவடிக்கைகளை செய்து உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும்.
அனைத்து வேலைகளையும் ஒழுக்கமாக செய்து முடித்த பிறகு, உங்களுக்கு நீங்களே நல்ல பாராட்டை பரிசாக கொடுத்துகொள்ளலாம். அது, இன்னும் இதே போல ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மேம்படுத்தும்.