மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்: ஓய்வூதிய விதிகளில் முக்கிய மாற்றம்

7th Pay Commission Latest News: கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிகளை மத்திய அரசு சமீபத்தில் மாற்றியுள்ளது. இந்த புதிய விதியின் கீழ், இப்போது ஒரு மத்திய அரசு ஊழியர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் நிதி உதவி பெறுவார்கள். இதில், ஊழியரை சார்ந்திருப்பவர்களுக்கு ஓய்வூதியப் பணத்தில் 50 சதவீதம் வழங்கப்படும். ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள இந்த முக்கியமான மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

 

 

1 /4

ஒரு அரசு ஊழியர் இறந்துவிட்ட நிலையில், அரசு ஊழியர்களை சார்ந்திருப்பவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க, அந்த ஊழியர் 7 ஆண்டுகாலம் சேவை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. புதிய விதியின்படி, இந்த விதிமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒரு ஊழியர் 7 வருட சேவை முடிவதற்குள் இறந்துவிட்டால், ஓய்வூதியப் பணத்தில் 50 சதவிகிதம் ஊழியரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

2 /4

அதாவது, இப்போது ஒரு அரசு ஊழியர் இறந்துவிட்டால், அவரது குடும்பம் / சார்ந்திருப்போருக்கு கிடைக்கக்கூடிய ஓய்வூதியத்துக்கான நிபந்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக பல சந்தர்ப்பங்களில், இந்த நிபந்தனைகள் காரணமாக, இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதிய பலனை பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

3 /4

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு அகவிலைப்படி, அதாவது டிஏவை அதிகரித்துள்ளது. மத்திய அரசு அகவிலைப்படி மீதான முடக்கத்தை நீக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தற்போதுள்ள 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 1, 2021 முதல் பொருந்தும்.

4 /4

கொரோனா நெருக்கடியின் காரணமாக ஜூலை 2021 வரை 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிப்பதை நிறுத்த நிதி அமைச்சகம் ஏப்ரல் 2020 இல் முடிவு செய்தது. 30 ஜூன் 2021 வரை அவர்களுக்கு டிஏ சலுகை கிடைக்கவில்லை. இப்போது இந்த முடக்கம் நீக்கப்பட்டுள்ளதால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அரசின் இந்த நடவடிக்கையால் பயனடைவார்கள். இது அரசாங்கத்தின் செலவை சுமார் ரூ .34,401 கோடியாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.