Mahindra கார்களில் 2.5 லட்சம் வரை தள்ளுபடி: செப்டம்பர் மாத சூப்பர் சலுகைகள்

உள்நாட்டு ஆட்டோமொபைல் பிராண்டான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (mahindra and mahindra), செப்டம்பர் 30 ​​வரை அதன் பல கார்கள் மற்றும் மாடல்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் மஹிந்திரா வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. கார்களில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் வாகனங்களின் விலை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /5

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி Mahindra XUV500 -ல் ரூ .179,800 ரொக்க தள்ளுபடி + ரூ .6500 கார்ப்பரேட் தள்ளுபடி + ரூ .50,000 வரை பரிவர்த்தனை போனஸ் + எக்சசரிசில் ரூ. 20,000 வரையிலான சலுகை ஆகியவை கிடைக்கின்றன. இந்த சலுகை W11 Option மற்றும் W11 Option AT ஆகியவற்றுக்கானது. Mahindra XUV500 W11 Option எஸ்.யு.வி-யின் மும்பை எக்ஸ் ஷோரூம் விலை 18.77 லட்சம் ரூபாய் ஆகும். Mahindra XUV500 W11 Option AT-யின் ஹைதராபாத் எக்ஸ் ஷோரூம் விலை ரூ . 19.98 லட்சம் ஆகும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

2 /5

மஹிந்திராவின் காம்பாக்ட் எஸ்யூவியான Mahindra XUV300-விலும் தள்ளுபடி உள்ளது. இதில், நீங்கள் ரூ .15,000 ரொக்க தள்ளுபடி + ரூ .4000 கார்பரேட் தள்ளுபடி + ரூ. 20,000 வரையிலான பரிவர்த்தனை போனஸ் + அக்சசரிசில் ரூ .5000 வரையிலான சலுகை ஆகியவற்றை பெறுகிறீர்கள். மஹிந்திரா XUV300-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .7,95,963 தொடங்குகிறது. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

3 /5

மஹிந்திராவின் Mahindra Alturas G4 -ரிலும் பல சலுகைகள் கிடைக்கின்றன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்த எஸ்யூவி-யில் ரூ .11,500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் அக்சசரிசில் ரூ .20,000 வரை சலுகை ஆகியவை கிடைக்கும். டெல்லியில் இந்த எஸ்யூவியின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .28,77,260 ஆகும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

4 /5

மஹிந்திராவின் மற்றொரு எஸ்யூவி மராஸோவும் (Mahindra Marazzo) பல சலுகைகளக் கொண்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் ரூ .20,000 வரை ரொக்க தள்ளுபடியும், ரூ. 5200 கார்ப்பரேட் தள்ளுபடியும் பெறலாம். மராஸோவின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .12,30,156 இல் தொடங்குகிறது. இந்த சலுகை M2, M2 8Str-க்கு பொருந்தும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

5 /5

மஹிந்திராவின் ஸ்கார்பியோ, பொலெரோ, KUV100 ஆகியவற்றிலும் நீங்கள் பெரும் சலுகைகளைப் பெறலாம். ஸ்கார்பியோவுக்கு ரூ .4,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ .5000 வரையிலான பிற சலுகைகள் கிடைக்கும். பொலெரோவில் ரூ .3000 வரை கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் ரூ .6550 மதிப்புள்ள பிற சலுகைகள் கிடைக்கின்றன. (ராய்ட்டர்ஸ்)