7th Pay Commission: அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படவில்லை என்றாலும், DA 50% வரம்பை கடக்கும் போது சில கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகள் மீது நேர்மறையான தாக்கம் இருக்கும்.
7th Pay Commission:5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஊதியக் குழுவால் பயன்படுத்தப்பட்ட அடிப்படைக் குறியீட்டை விட 50% அதிகரிக்கும் போதெல்லாம் அகவிலைப்படியை இணைப்பதற்கான ஏற்பாடு இருந்தது. இந்த கொள்கை கடைசியாக பிப்ரவரி 27, 2004 அன்று அமல்படுத்தப்பட்டது. அப்போது ஜனவரி 1, 2004 முதல், அடிப்படை ஊதியத்துடன் 50% டிஏவை இணைக்க அரசு உத்தரவிட்டது. எனினும், 6வது மத்திய ஊதியக் குழுவில் நிலைமை முற்றிலும் மாறியது. அதில், எந்தக் கட்டத்திலும் அடிப்படை ஊதியத்துடன் DA ஐ இணைப்பதற்கு எதிராக வெளிப்படையாகப் பரிந்துரைக்கப்பட்டது. அணுகுமுறையில் இந்த அடிப்படை மாற்றம் 7வது ஊதியக் குழுவால் மேலும் வலுப்படுத்தப்பட்டது. 7வது ஊதியக்குழு இணைப்பு அம்சத்தில் மௌனம் காத்து, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் ஒன்றிணைக்காத கொள்கையை திறம்பட தொடர்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு அகவிலைப்படியில் (Dearness Allowance) 3 சதவீத உயர்வை சமீபத்தில் அறிவித்தது. ஜூலை 1, 2024 முதல் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50% முதல் 53% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு அரசு ஊழியர்களுக்கு வரவேற்கத்தக்க நிவாரணமாக வந்துள்ளது. எனினும், முக்கியத்துவம் வாய்ந்த 50% வரம்பைத் தாண்டிய போதிலும், அடிப்படை ஊதியத்துடன் டிஏ (DA) இணைக்கப்படும் என்ற நம்பிக்கையை அது அழித்துவிட்டது.
அக்டோபர் 21 அன்று செலவினத் துறையால் வெளியிடப்பட்ட சமீபத்திய அலுவலக குறிப்பாணை, மத்திய அரசு ஊழியர்களுக்கான DA விகிதங்களை உயர்த்துவதை உறுதிப்படுத்துகிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி செயல்படுத்தப்பட்ட இந்த உயர்வு, விலைவாசி உயர்விலிருந்து தனது ஊழியர்களைக் காக்கும் அரசாங்கத்தின் முயற்சியைப் பிரதிபலிக்கிறது.
இந்த முடிவின் தாக்கம் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், ஓய்வூதியம் பெறுவோருக்கும் இருக்கும். அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் பெறுவோரின் (Pensioners) அகவிலை நிவாரணமும் (Dearness Relief) 53% ஆக அதிகரித்துள்ளது. இந்த விரிவான திருத்தத்தின் மூலம் சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதனால் அரசாங்க கருவூலத்தில் ஆண்டுக்கு 9,448.35 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையானது அடிப்படை ஊதியத்துடன் DA இணைப்பது தொடர்பான வரலாற்று நடைமுறைகளிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் குறிக்கிறது. 5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஊதியக் குழுவால் பயன்படுத்தப்பட்ட அடிப்படைக் குறியீட்டை விட 50% அதிகரிக்கும் போதெல்லாம் அகவிலைப்படியை இணைப்பதற்கான ஏற்பாடு இருந்தது. இந்த கொள்கை கடைசியாக பிப்ரவரி 27, 2004 அன்று அமல்படுத்தப்பட்டது. அப்போது ஜனவரி 1, 2004 முதல், அடிப்படை ஊதியத்துடன் 50% டிஏவை இணைக்க அரசு உத்தரவிட்டது.
எனினும், 6வது மத்திய ஊதியக் குழுவில் நிலைமை முற்றிலும் மாறியது. அதில், எந்தக் கட்டத்திலும் அடிப்படை ஊதியத்துடன் DA ஐ இணைப்பதற்கு எதிராக வெளிப்படையாகப் பரிந்துரைக்கப்பட்டது. அணுகுமுறையில் இந்த அடிப்படை மாற்றம் 7வது ஊதியக் குழுவால் மேலும் வலுப்படுத்தப்பட்டது. 7வது ஊதியக்குழு இணைப்பு அம்சத்தில் மௌனம் காத்து, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் ஒன்றிணைக்காத கொள்கையை திறம்பட தொடர்கிறது.
அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்குப் பதிலாக, அகவிலைப்படியை ஒரு தனி அங்கமாகத் தொடரும் முடிவு பல குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாமல் தொடர்ந்து அதிகரிக்கும். அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருந்திருக்கும். அதன் அடிப்படையில் பிற கொடுப்பனவுகளிலும் ஏற்றம் இருக்கும்.
அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படவில்லை என்றாலும், DA 50% வரம்பை கடக்கும் போது சில கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகள் மீது நேர்மறையான தாக்கம் இருக்கும். போக்குவரத்து கொடுப்பனவு (transport allowance), தங்கும் விடுதி கொடுப்பனவு (staying accommodation allowance), ஆடை கொடுப்பனவு (dress allowanc) மற்றும் பணிக்கொடை (Gratuity) ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்த கொடுப்பனவுகள் DA இன் சதவீதமாக கணக்கிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். DA 50% ஐ எட்டும்போது, இந்த கொடுப்பனவுகள் நிலையான 25% அதிகரிப்பைப் பெறுகின்றன.
ஊதிய உயர்வு கணக்கீடு: சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ 30,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.18,000 இருந்தால், அவர் தற்போது அகவிலைப்படியாக ரூ 9,000 -ஐப் பெற்றுவருகிறார். இது அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஆகும். இப்போது 3% டிஏ உயர்வுக்கு (DA Hike) பிறகு அவருக்கு அகவிலைப்படியாக மாதம் ரூ.9,540 கிடைக்கும். அதாவது இப்போது அவருக்கு மாதா மாதம் ரூ.540 அதிகமாக கிடைக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.
சம்பள உயர்வு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும்.
அகவிலைப்படி அதிகரிப்பு அக்டோபரில் அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் (DA Arrears) தொகையும் சேர்த்து வழங்கப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.