7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என கூறப்படுகின்றது. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கும்.
7th Pay Commission: ஜூன் 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரிகப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% ஆக உயரும். அகவிலைப்படி 4% அதிகரிகப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 54% ஆக உயரும். அரசாங்க அறிவிப்பிற்கு பிறகுதான் இது இறுதியாகும். இந்த டிஏ உயர்வால் (DA HIke) 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைவார்கள்.
UPS அதாவது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிமுகத்திற்கு பிறகு, தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றொரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. செப்டம்பர் 2024 -இன் மூன்றாவது வாரத்தில் மத்திய அரசு 3-4 சதவீத டிஏ உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என கூறப்படுகின்றது. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கும். அரசாங்கம் விரைவில் அகவிலைப்படியை (Dearness Alowance) 3 அல்லது 4 சதவீதம் உயர்த்தும். இந்த அதிகரிப்பு பணவீக்கத்தை கணிசமாக குறைக்கும்.
அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு சம்பளம் எவ்வளவு உயரும்? இதற்கான கணக்கீட்டின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றின் அறிவிப்புக்கான நேரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இன்னும் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் வாரம் அல்லது கடைசி வாரத்தில் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரிகப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% ஆக உயரும். அகவிலைப்படி 4% அதிகரிகப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 54% ஆக உயரும். அரசாங்க அறிவிப்பிற்கு பிறகுதான் இது இறுதியாகும். இந்த டிஏ உயர்வால் (DA HIke) 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைவார்கள்.
ஊதிய உயர்வு கணக்கீடு: டிஏ (DA) 3% அதிகரிக்கப்பட்டால் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். லெவல்-1ல் உள்ள மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் கணக்கீட்டை காணலாம். 1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000 2. புதிய அகவிலைப்படி (53%) - ரூ 9540/மாதம் 3. இதுவரையிலான அகவிலைப்படி - (50%) ரூ 9000/மாதம். 4. அகவிலைப்படி அதிகரிப்பு - 9540-9000= ரூ 540/மாதம் 5. 6 மாதங்களுக்கான சம்பள உயர்வு - 540X6= ரூ 3,240.
ஊதிய உயர்வு கணக்கீடு: டிஏ (DA) 4% அதிகரிக்கப்பட்டால் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு பணியாளரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 40,000 என வைத்துக்கொள்வோம். டிஏ 4% அதிகரிக்கப்பட்டால், அவருக்கு மாத ஊதியத்தில் ரூ.1,600 அதிகமாகும். ஆண்டு சம்பளம் ரூ.19,200 அதிகரிக்கும். மத்திய ஊழியரின் சம்பளம் ரூ.60 ஆயிரமாக இருந்தால், 4 சதவீத டிஏவின்படி ரூ.2400 மாத உயர்வு இருக்கும். ஆண்டுக்கு சுமார் ரூ.28,000 சம்பள உயர்வு கிடைக்கும்.
ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8வது ஊதியக் குழு குறித்து பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்ற நிலைபாட்டிலேயே மத்திய அரசு உள்ளது. ஆனால், 2026 ஆம் ஆண்டுதான் இதன் அமலாக்கம் என்பதால், இதற்கான நம்பிக்கையும் இன்னும் உள்ளது
சமீபத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில், COVID-19 தொற்றுநோய்களின் போது நிறுத்தப்பட்ட 18 மாத DA மற்றும் DR -க்கான அரியர் நிலுவைத் தொகையை அரசாங்கம் வெளியிட வாய்ப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட அசாதாரண சூழிநிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தவணைகளுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை முடக்கப்பட்டன. இந்த தொகை தேவையில் இருந்த பிரிவினருக்கான நலத்திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது.
அகவிலைப்படி (DA) என்பது மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள், அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் விளைவுகளைச் சமாளிக்க கொடுக்கும் ஒரு சலுகைத் தொகையாக உள்ளது. கூடுதல் நிதி உதவியை வழங்கி பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து அரசு ஊழியர்களைப் பாதுகாக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.