Ajith Kumar Daughter Anoushka Birthday Photos : நடிகர் அஜித் குமாருக்கும் ஷாலினிக்கும் அனௌஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில், அனௌஷ்கா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ajith Kumar Daughter Anoushka Birthday Photos : கோலிவுட்டில் முன்னணி தமிழ் நடிகராக வலம் வருபவர், அஜித் குமார். இவர், 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். ஷூட்டிங் இல்லாத காலங்களில் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவார். அந்த வகையில், தன் மகளின் பிறந்தநாளையும் அவர் சிம்பிளாக குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார்.
திரையுலகில் இருக்கும் நடிகர்களில் இருந்து, சற்று வித்தியாசப்பட்டவர் நடிகர் அஜித். ஷூட்டிங்கை தவிர வேறு எங்கும் தன்னை சுற்றி கேமரா இருப்பதை விரும்ப மாட்டார். அது மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ‘நல்ல குடும்பஸ்தன்’ என்ற பெயரும் உள்ளது.
24 வருடங்களுக்கு முன்பு தனக்கு சினிமாவில்ஜோடியாக நடித்த ஷாலினியை, ரியல் வாழ்க்கையிலும் ஜோடி ஆக்கிக்கொண்டார். இவர்களின் அன்பும் காதலும், இத்தனை வருடங்களை கடந்தும் இன்னும் பெருகிக்கொண்டே போகிறது.
அஜித், குடும்பத்திற்காக சினிமாவை விட்டுக்கொடுப்பாரே தவிர, வேறு எதற்காகவும் தனது குடும்பத்தை விட்டுக்கொடுக்காதவராக இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது கூட, தனது மனைவி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் ஓடோடி வந்து அவரை பார்த்தார். தனது மனைவிக்கு நல்ல கணவராக மட்டுமன்றி, குழந்தைகளுகு நல்ல தந்தையாகவும் நடந்து கொள்கிறார்.
அஜித்தின் மகள் அனோஷ்கா 2008ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தற்போது 17 வயதாகியிருக்கிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்ட விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனௌஷ்கா, தனது பிறந்தநாளை தனது பெற்றோருடனும், மாமா ரிச்சர்ட் ரிஷி மற்றும் சித்தி ஷாமிலியுடனும் கொண்டாடி இருக்கிறார்.
அனௌஷ்காவை குழந்தையாக பார்த்த ரசிகர்கள், இப்போது இவர் வளர்ந்து ஹீரோயின் போல தோற்றமளிப்பதாக கூறி வருகின்றனர்.
அனௌஷ்காவுடன் அஜித்,ஷாலினி இருக்கும் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.