Actor Rajinikanth Holi Celebration : ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டதை ஒட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் இப்பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்.
Actor Rajinikanth Holi Celebration : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். என்னதான் ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தாலும் உள்ளுக்குள் இன்னும் இயல்பான மனிதராகவே இருக்கிறார். பிற பண்டிகைகளையும் அவ்வாறே கொண்டாடி வருகிறார். அந்த வகையில், தனது பேரன்களுடன் ஹோலி பண்டிகையையும் கொண்டாடியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த், தனது குடும்பத்தினருக்காகவும் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்ககூடியவர்.
தனுஷ்-ஐஸ்வர்யாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் பெயர், யாத்ரா மற்றும் லிங்கா. இவர்கள் பிரிந்த பின்னர், தங்களது பிள்ளைகளை கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர்.
ரஜினி, தனது பேரன்களுடனும் அதிக நேரம் செலவிடுவார். பண்டிகைகள் வந்தால் அவர்களுடன்தான் சேர்ந்து கொண்டாடுவார்.
ஐஸ்வர்யா, தனது தந்தையை வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியுற்றதை அடுத்து, ரசிகர்கள் அனைவரும் இவரை ட்ரோல் செய்தனர்.
ஐஸ்வர்யா, லால் சலாம் படம் தோல்வியானதற்கு காரணமே, படத்தின் 21 நாள் காட்சிகள் காணாமல் போய் விட்டதாக கூறினார். இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த், தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார், ஐஸ்வர்யா. அந்த வகையில் ஹோலி கொண்டாட்ட புகைப்ப்டங்களையும் பதிவிட்டிருக்கிறார்.
இந்த வருடத்தின் ஹோலியை கேக் வெட்டி, பலுனுடன் தனது பேரப்பிள்ளைகளை அருகில் வைத்துக்கொண்டு கொண்டாடியிருக்கிறார், ரஜினி.